• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பிள்ளை மனசு கல்லு.. பெத்த மனசும் கல்லு.. இது தேவிப்பிரியாவுக்கும் அபிராமிக்கும் பொருந்தும் புதுமொழி!

|

சென்னை: பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது பழமொழி. ஆனால் இங்கோ பிள்ளை மனம் போல் பெத்த மனமும் கல்லாகிவிட்டது. இது போன்ற இரு சோகக் கதைகளை இந்த ஆண்டில் மறக்க முடியாதவையாகும்.

ஆம் தமிழகத்தையே உலுக்கிய இரு வேறு சம்பவங்கள் நடந்து முடிந்தன. ஒன்று கள்ளக்காதலுக்காக இன்னொன்று காதலுக்காக... சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு முத்தான இரு குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் அபிராமிக்கு பிரியாணி மீது மோகம் அதிகமாம். இதனால் கடை கடையாக சென்று பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படியிருக்கும் போது அதே பகுதியில் ஒரு கடைக்கு சென்று பிரியாணி சாப்பிடும் போது அங்கு கேஷியராக இருந்த சுந்தரத்துடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

கழுத்தை நெரித்து

கழுத்தை நெரித்து

நாளடைவில் டெலிவரி செய்ய ஆள் இல்லாத நேரத்தில் சுந்தரமே அபிராமியின் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்து சென்றிருக்கிறார். இது அப்படியே கள்ளக்காதலாகிவிட்டது. பின்னர் குழந்தை, கணவர் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலை வளர்க்க முடியாது என கருதிய அபிராமி, குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலக்கி கொடுத்தும் சாகாததால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.

சுந்தரம் கைது

சுந்தரம் கைது

பின்னர் சுந்தரத்துடன் குடும்பம் நடத்த நாகர்கோவிலுக்கு தப்பி சென்ற அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அபிராமிக்கு குழந்தைகளை கொல்லுமாறு ஐடியா கொடுத்த சுந்தரமும் கைது செய்யப்பட்டார்.

இரு மகள்கள்

இரு மகள்கள்

அடுத்தது காதல் சம்பவம்... திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8-ஆவது தெருவை சேர்ந்தவர் திருமுருகநாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி (50). இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

காதலுக்கு இடையூறு

காதலுக்கு இடையூறு

இவர்களது 2-ஆவது மகள் தேவிப்பிரியா (19), பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் (24) என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு இடையூறாக அவரது தாய் இருந்துள்ளார்.

உயிரிழந்தார்

உயிரிழந்தார்

இதையடுத்து காதலியை அழைத்து வருமாறு இரு நண்பர்களை சுரேஷ் தேவிப்பிரியாவின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அப்போது நகை, துணிமணிகளை பேக் செய்து கொண்டு அவர்களுடன் புறப்படுவதை அவரது தாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவிப்பிரியா தனது கையில் இருந்த கத்தியால் தாயின் வயிறு, மார்பு பகுதிகளில் குத்தி கிழித்தார். இதில் அவர் உயிரிழந்துவிட்டார்.

தற்கொலை

தற்கொலை

இந்த இரு சம்பவங்களிலும் இருவருமே தாய்க்கும் தாய் பாசத்துக்கும் மரியாதை கொடுக்கவில்லை. 10 மாதம் வயிற்றில் இருக்கும் முகம் தெரியாத சிசுக்காக தாயானாவள் எத்தகைய துன்பங்களை அனுபவிப்பாள் என்பது குழந்தை பெற்றவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும். ஆனால் முத்தான இரு குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்து புனிதமாக கருதப்படும் பசும்பாலில் விஷத்தை கலந்து கொடுத்த அபிராமியை எத்தனை ஆண்டுகளானாலும் மறக்கவே முடியாது. குடும்பத் தகராறில் தற்கொலை செய்யும் பெண்களும் தனக்கு பிறகு குழந்தை ஆதரவற்று இருக்க கூடாது என்பதற்காக அவர்களையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை அவர்கள் எங்கே இந்த அபிராமி எங்கே?

பானுமதி செய்தது தவறு

பானுமதி செய்தது தவறு

பிரசவம் என்பது தாய்க்கு மறுஜென்மம் ஆகும். அத்தகைய பெரும் வலியையும் பொருட்படுத்தாமல் அடுத்த குழந்தைக்கு உயிர் கொடுக்க மனதளவில் தயாராகும் தாய்க்குத்தான் தெரியும் பிரசவ வலி என்பது எத்தனை சுகமானது என்பது. அத்தகைய தாயை அவர் வயிற்றில் 10 மாதம் பொக்கிஷமாக இருந்த இடத்தையும் 24 மாதங்கள் குடித்த மார்பையும் வெட்ட எப்படித்தான் இந்த தேவிப்பிரியாவுக்கு மனம் வந்ததோ. செய்வதையும் செய்துவிட்டு தாய் இறந்த வருத்தம் கூட இல்லாமல் இருப்பதை பார்க்கும் போது இவளுக்கெல்லாம் கள்ளிப்பால் கொடுத்திருக்காமல் விட்டது பானுமதியின் தவறு என்றுதான் தோன்றுகிறது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Flashback 2018: Here is the comparison of Devipriya and Abirami. The former killed her mom for love and the latter killed her kids for illicit love.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more