சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே நடுங்க வைத்த மீ டூ புகார்கள்.. சிக்கி திக்குமுக்காடிய பிரபலங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஆண்டு சுசிலீக் விவகாரம் எத்தகைய பரபரப்பை ஏற்படுத்தியதோ அதையும் தாண்டி பரபரப்பையும் விறுவிறுப்பையும் மீ டூ புகார்கள் இந்த ஆண்டு ஏற்படுத்தியது.

பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்களை மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிப்படுத்தி வந்தனர். இதில் பிரபலங்களும் சிக்கினர். சுவிட்சர்லாந்துக்கு வைரமுத்துவுடன் சின்மயி சென்ற போது அவரிடம் வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என சின்மயி பரபரப்பு புகாரை அளித்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து திமுகவில் முக்கிய பிரமுகர், பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர். ஆனால் இவர் மீது இத்தகைய புகாரை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் அந்த புகாருக்கு அவர் உடனடியாகவும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

தவறாக

தவறாக

ஒரு வாரம் கழித்தே இது ஜோடிக்கப்பட்ட புகார் என்றார். மேலும் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. ஒரு அமெரிக்க பத்திரிகையில் பணியாற்றும் பெண் ஒருவர், ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அக்பரிடம் பணியாற்றும்போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் கூறினார்.

புகார்

புகார்

ஆனால் அவரது மனைவியோ இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இந்த விவகாரத்தால் அவர் பதவியில் இருக்கக் கூடாது என கண்டனங்கள் எழுந்தன. அது போல் இயக்குநர் சுசி கணேசன் மீது குறும்பட இயக்குநர் லேனா மணிமேகலை புகார் தெரிவித்தார்.

வழக்கு

வழக்கு

இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் ஆஃப் ஆனவுடன் நடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதி ஹரிஹரன் புகார் கூறினார். நிபுணன் படத்தில் நடித்த போது அர்ஜூன் தன்னை அவரது அறைக்கு அழைத்தார் என்றும் தன்னை இறுக்கி அணைத்தார் என்று குற்றச்சாட்டை எழுப்பினார். பின்னர் அர்ஜூனும் ஸ்ருதி மீது மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்வதாக தெரிவித்திருந்தார்.

புயல்

புயல்

இது போல் மீ டூ புகாரால் மார்கழி மகா உற்சவத்தில் பாட தி மியூசிக் அகாதெமி 7 இசை கலைஞர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. இந்த மீ டூ புகார் என்பது 2018-ஆம் ஆண்டு அனைத்து தரப்பினரிடமும் புயலை கிளப்பி விட்டது என்றே கூறலாம்.

English summary
Flashback 2018: Me too Movement gives tension to familiar persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X