சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளாஸ்பேக் 2019: எந்த "ஷா"வும்.. அதை மாற்ற முடியாது.. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கமல்!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இந்த ஆண்டு கொந்தளித்து வெளியிட்ட மூன்று வீடியோக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவற்றை இப்போது பார்ப்போம்.

கமல்ஹாசன் 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து தான் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார், இந்த பயணம் அவருக்கு நிச்சயம் உற்சாகத்தை அளித்திருக்கும். ஏனெனில் இந்த தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குகளை கைப்பற்றி அசத்தியது.

இந்த தேர்தலுக்கு பிறகு கமல் அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புகளை செய்தார். அவற்றில் பல எதிர்க்கட்சிக்கு நிகராக ஆளும் அரசுகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

இதெல்லாம் ரொம்ப ஓவர் கலாயா இருக்கேய்யா... இதுக்காகவாச்சும்.. ரஜினி அரசியலுக்கு வரணும் சீக்கிரம்...!இதெல்லாம் ரொம்ப ஓவர் கலாயா இருக்கேய்யா... இதுக்காகவாச்சும்.. ரஜினி அரசியலுக்கு வரணும் சீக்கிரம்...!

 கமல் வீடியோ

கமல் வீடியோ

அவற்றில் முக்கியமானது இந்தி திணிப்பு, இந்தியை மூன்றாவது மொழியாக பள்ளிகளில் திணிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் மாதம் கமல் ஹாசன் வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 மொழி முக்கியம்

மொழி முக்கியம்

அதில் கமல், "பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுத்தரவே முடியாது என்று பல மாநில மக்கள் சொன்ன விஷயம், எங்கள் மொழியும் கலாச்சாரமும். 1950-ல் இந்தியா குடியரசானபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை எந்த "ஷா"வோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்ககூடாது.

 சிறிய வெற்றி

சிறிய வெற்றி

ஜல்லிக்கட்டு போராட்டம்.. ஒருசிறிய போராட்டம். ஒரு சிறிய வெற்றி.. எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால், அது அதைவிட பன்மடங்காக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கோ தமிழ்நாட்டுக்கோ தேவையற்றது.

திகட்டி விடும்

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் திகட்டி விடும். தயவு செய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையை ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு" என்று தெரிவித்திருந்தார்.

அலட்சிய கொலை

இன்னொரு வீடியோ, அதிமுக பேனரால் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த சுபஸ்ரீக்காக வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவுடன் வெளியிட்ட டுவிட் பதிவில் "தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்" என்று கூறியிருந்தார். அத்துடன் பேனர் வைத்ததால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சுபஸ்ரீ மற்றும் ரகுவுக்காக அதிமுகவை கண்டித்தார்.

 கொதித்த மக்கள்

கொதித்த மக்கள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கமல் ஹாசன் வெளியிட்ட வீடியோக்கள் மிகுந்த ஆக்ரோசமாக இருந்தன. அந்த வீடியாவில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி. விலைவாசி விண்ணைமுட்டும் வகையில் ஏறி வரும் நிலையில் குடியுரிமை சட்டத்திற்கான அவசரம் என்ன என்கிற கேள்விதான் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கக் காரணம்.

புதிய இந்தியா

பாகிஸ்தானின் இந்துக்களுக்கு வழங்கப்படும் உரிமை இலங்கையின் இந்துக்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும், இந்திய ஜனநாயகத்தின் மீது விழும் அடி. புதிய இந்தியா பிறந்துவிடும் என ஆசைவார்த்தை கூறி சட்டத்திருத்தங்களை தனக்கு சாதகமாக மாற்றியவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றின் இருண்ட பக்கத்தில் இருக்கிறது என்று கூறியிருந்தார். அத்துடன் வீடியோவிற்கு மேல் பதிவிட்ட டுவிட்டில், அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம் . மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் . நாம் யாருமே ஓயக்கூடாது. என்று பதிவிட்டிருந்தார்.

English summary
flashback 2019 : makkal needhi maiam leader kamal haasan angry speech against hindi imposition, Citizenship act and many issues
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X