சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையிலிருந்து, சேலம், தூத்துக்குடிக்கு பறக்கிறது விமானம்.. இதுதான் கால அட்டவணை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையிலிருந்து, சேலம், தூத்துக்குடிக்கு விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 2 விமான நிறுவனங்கள் மூலம் 5 விமான சேவைகள் நடைபெற்று வந்தது. பெங்களூர் நகருக்கும் ஒரு விமானம் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விமான சேவை நிறுத்தப்பட்டது. தூத்துக்குடியிலும் தொடர்ந்து 2 மாதங்களாக விமானங்கள் இயக்கப்படவில்லை.

Flight services started from Chennai to Salem and Tuticorin

இந்த நிலையில் உளல்நாட்டு விமான இயக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து, சென்னை-தூத்துக்குடி-சென்னை இடையேயான விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், இன்று முதல் சென்னை-தூத்துக்குடி விமான சேவை துவங்குகிறது.

சென்னையில் இருந்து விமானம் காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.35 மணிக்கு தூத்துக்குடிக்கு செல்கிறது. அதன்பிறகு தூத்துக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை செல்கிறது. தூத்துக்குடியிலிருந்து மதியம் 1.20 மணிக்கு கிளம்பும் விமானம் 3 மணிக்கு சென்னை சென்றடையும்.

ஒருவழியாக.. சென்னையில் மீண்டும் ஓடும் ஆட்டோ, டாக்சி.. விமான, ரயில் நிலையங்களுக்கு இயக்க அரசு அனுமதிஒருவழியாக.. சென்னையில் மீண்டும் ஓடும் ஆட்டோ, டாக்சி.. விமான, ரயில் நிலையங்களுக்கு இயக்க அரசு அனுமதி

இந்த மாதம் 26, 28, 30 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படும். இதேபோல சென்னை-சேலம் ட்ரூ ஜெட் விமான சேவையும் நாளை துவங்குகிறது.

அதன்படி சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு ட்ரூ ஜெட் விமானம் புறப்பட்டு, 8.25 மணிக்கு சேலம் சென்றடையும். பின்பு காலை 8.55 மணிக்கு அந்த விமானம் சேலத்தில் இருந்து புறப்பட்டு, 9.50 மணிக்கு சென்னையை வந்தடையும்.

English summary
Fligh services started from Chennai to Salem and Tuticorin, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X