சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிறகென்னப்பா.. குஷ்பு வந்தாச்சு.. ராதாரவி ஏற்கனவே "எஸ் சார்".. "அண்ணாமலை" மட்டும்தான் பாக்கி!

ரஜினியும் விரைவில் பாஜகவில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சின்ன சின்ன மீன்கள் எல்லாம் பாஜகவுக்கு படையெடுத்து வரும் நிலையில், இன்னும் அந்த பெரிய மீனை காணோமே என்ற ஆவல் எழுந்துள்ளது.. அதாவது, குஷ்பு, ராதாரவி உள்பட பலரும் பாஜக பக்கம் படையெடுத்து வரும் நிலையில், "அண்ணாமலை" மட்டும்தான் பாக்கி.. விரைவில் அவரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்பதே அந்த சந்தேகம்.

குஷ்பு, நமீதா, கெளதமி, காயத்ரி ரகுராம், ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரிராஜா, குட்டி பத்மினி, எஸ்.வி.சேகர், மதுவந்தி.. என்று பாஜகவின் ஸ்டார் கேஸ்ட் எகிறிக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் இப்படியெல்லாம் திராவிடக் கட்சிகளில்தான் நடக்கும். ஆனால் அது இப்போது அலேக்காக மாறி பாஜக பக்கம் தாவிக் கொண்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அதிமுக, பாஜக இடையே இணக்கமான போக்கு ஏற்படவில்லை.. எனினும் அதிமுகவுடன் இணைந்துதான் தேர்தலை சந்திக்க இருப்பதாக பாஜக சொல்லி வருகிறது.

இப்படி நடக்குமா.. தமிழக பாஜக தலைவர் + முதல்வர் வேட்பாளராவாரா குஷ்பு.. பெரும் எதிர்பார்ப்பு! இப்படி நடக்குமா.. தமிழக பாஜக தலைவர் + முதல்வர் வேட்பாளராவாரா குஷ்பு.. பெரும் எதிர்பார்ப்பு!

 சட்டமன்றம்

சட்டமன்றம்

அதேசமயம், "வரும் காலம் பாஜகவின் காலமாக இருக்கும்... பாஜகவை சேர்ந்த கணிசமான நபர்கள் சட்டமன்றத்தில் இருப்பார்கள்.. கோட்டையில் காவி கொடி பறக்கும்.. 60 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு பாஜக வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.. அதிலும், கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்... பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தியே தமிழகத்தில் தேர்தலை சந்திக்கவுள்ளோம்" என நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்.

 எல்.முருகன்

எல்.முருகன்

இவ்வளவு சொல்லியும் அதிமுக இதற்கு எந்தவித பதிலையும் சொல்லாமல் மவுனமாகவே இருக்கிறது.. அதனால் வரப்போகும் தேர்தலில் இவர்கள் கூட்டணி வைப்பார்களா? அப்படியே வைத்தாலும் எதிர்பார்த்த சீட்டுகள் பாஜகவுக்கு கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.

பாஜக

பாஜக

ஒருவேளை தனியாக நின்று தேர்தலை சந்திக்க நேர்ந்தால், அதற்கும் தயாராகவே தங்களை பாஜக தயார்படுத்தி வருகிறது.. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரபலங்களுக்கு குறி வைத்து, அவர்களை பாஜகவில் இழுத்து வருகிறது.. அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்களையே பாஜக அதிகம் நம்புகிறது.. அந்த வகையில் ஏற்கனவே ராதாரவி கட்சிக்குள் வந்துவிட்டார்.. இப்போது குஷ்புவும் வந்தாகிவிட்டது.. மிச்சம் இருப்பது ரஜினிகாந்த் மட்டும்தான்.

 அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள், ரஜினிகாந்த், குஷ்பு, ராதாரவி.. அதில் ராதாரவி வந்தாச்சு, குஷ்புவும் இன்று போயாச்சு.. ரஜினிகாந்த் மட்டுமே பாக்கி.. உண்மையை சொல்லப்போனால், இவருக்குதான் முதல்வலை வீசப்பட்டது.. ஆனால், அவரை தவிர எல்லோருமே அந்த வலையில் சிக்கி வருகிறார்கள்.. ரஜினியை கட்சிக்கு வரும்படி சீனியர் பாஜக தலைவர்கள் முதல் ஜுனியர் பாஜக தலைவர்கள் வரை அழைப்பு விடுத்தாயிற்று.. ஆனால் ரஜினிதான் எந்த முடிவையும் எடுப்பதாக தெரியவில்லை.

ஆன்மீகவாதி

ஆன்மீகவாதி

ஆனால், ஒருமுறை எல்.முருகனிடம் "நடிகர் ரஜினியை பாஜகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறதே" என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு அவர், 'ரஜினி ஆன்மீகவாதி, தேசியவாதி, அவர் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும்.. என்றார்.. முருகன் ஒருவரை "பாஜக வரவேற்கும்" என்று அழைப்பு விடுத்தாலே, அவர் அடுத்த சில தினங்களில் கட்சியில் வந்து சேர்ந்து விடுகிறார்.. அந்த அளவுக்கு பாஜகவின் காய் நகர்த்தல்கள் பலமாக இருந்து வருகின்றன.

 யோசனை

யோசனை

எப்படியும், பிப்ரவரி மாதம் கட்சியை ஆரம்பிக்க போவதாக ரஜினி தரப்பு சொல்லி உள்ளது.. அதற்குள் பட வேலைகளை முடித்துவிட்டு, பொங்கலுக்கு படத்தையும் ரிலீஸ் செய்துவிட்டால், கட்சியை ஆரம்பிப்பது எளிது என்பது அவர்களின் யோசனையாக இருக்கிறது.. அப்படி ரஜினி கட்சி ஆரம்பித்தால், நிச்சயம் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக இருக்கும் என்ற நம்பிக்கை நீண்ட நாளாகவே தமிழகத்தில் உள்ளது.

 3 மாதம்

3 மாதம்

அப்படியென்றால், கட்சி முதலில் ஆரம்பித்துவிட்டு, அதன்பிறகு பாஜகவுடன் இணைவாரா? கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பாரா? அல்லது பாஜக, ரஜினி தலைமையில் 3வது அணி அமையுமா என தெரியவில்லை.. ஆனால், மிச்சம் இருக்கிற இந்த 3 மாசத்தையும் வீணாக்காமல் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடும் என்பது மட்டும் உறுதி.. அதை விட ரஜினி, ஏதாவது ஒரு ரூபத்தில் பாஜக பக்கம் மட்டுமே இருப்பார் என்பது 200 சதவீதம் உறுதி என்று சொல்கிறார்கள்.

English summary
Following Kushbu, there is an expectation that Rajinikanth will also join the BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X