• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே.. இணையத்தில் கலக்கும் fooddoo.com.. ஆர்டர் பண்ணா அசந்துடுவீங்க!

சென்னை: பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை இணையம் மூலம் வழங்கி வருகிறது fooddoo.com.

அவசர அவசரமா ஆபீஸ் போயிட்டு, வீட்டுக்கு வந்ததும் அம்மா கையால சாப்பிட ஆசைப்பட்டு இருக்கீங்களா? ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி பண்ணி சாப்பிட்டு நாக்கு ''நாக் அவுட்'' ஆகிட்டதா? சொந்த ஊர் ஸ்டைல்ல ஜம்முன்னு சாப்பிட்டிட்டு கம்முன்னு தூங்க முடியலைன்னு உம்ன்னு இருக்கீங்களா? உங்களுக்காக வந்ததுதான் fooddoo.com.

Fooddoo.com gives you a variety of homemade foods in a traditional taste

இந்த மிக பரபரப்பான காலகட்டத்தில், மக்கள் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது அதிகம் ஆகிவிட்டது. சுவையான உணவுகள் கிடைக்கும், நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் ஹோட்டல்களை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

ஆனாலும் நாளாக நாளாக பலர் இதன் காரணமாக உடல் உபாதைக்கு உட்படுகிறார்கள். ஹோட்டல்ல சாப்பிட்டு சாப்பிட்டு பர்ஸ் தேயுற மாதிரி தொப்பை வளர்ந்துக்கிட்டே போகுற பல பேர் இருக்காங்க. இதனால் மருத்துவத்திற்கும் நம்ம மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள்.

நம்முடைய அம்மாக்கள், ''ஹோட்டல்ல சாப்பிடாம ஒழுங்கா, வீட்டில சமைச்சு சாப்பிடு'' என்று எவ்வளவு கூறினாலும் நாம் கேட்பதில்லை. அட, வேலை முடித்து களைப்பில் வீட்டிற்கு வந்ததும் நமக்கு சாப்பாடு மேஜை மீது இருக்கணும், என்று நினைக்கிறோம்.

Fooddoo.com gives you a variety of homemade foods in a traditional taste

சரி, ஒருவேளை நமக்கு தினமும் வீட்டு சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். சொந்த ஊர்ல அம்மா கைப்பக்குவத்துல செஞ்ச அதே சாப்பாடு கிடைச்சா எப்படி இருக்கும். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் கூட நமக்கு சுவையான ஆரோக்கியமான சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும்.

இதற்கு ஒரே வழி "fooddoo.com" தான். ஆமாங்க, இவங்களோட fooddoo.com இணையதளத்தில், அம்மாக்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பெண்கள் மூலம் வீட்டில் தயார் செய்யப்படுவது போலவே இந்த உணவுகள் தயார் செய்யப்படுகிறது.

இந்தியாவின் பல விதமான உணவுகள் இங்கு கிடைக்கும். உதாரணமாக செட்டிநாடு, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், பஞ்சாபி, குஜராத்தி, ஆந்திரா குன்டூர், கர்நாடகா, கேரளான்னு இந்திய மேப்ல எங்க கை வச்சு கேட்டாலும் அந்த ஊர் ஸ்டைல் உணவுகள் இங்கு கிடைக்கும்.

அதுமட்டும் இல்லை பாஸ் பேலியோ டயட் உணவுகள், சர்க்கரை வியாதி டயட் உணவுகள் போன்ற டயட் உணவுகள் கூட இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் வயதான முதியவர்களுக்கான சிறப்பு உணவுகளும் இவர்களிடம் கிடைக்கும்.

அதேபோல் சைவ உணவு வேண்டும் என்பவர்களுக்கு, சைவம் சமைக்கும் வீட்டிலிருந்தே டெலிவரி செய்யப்படும். அதேபோல் அசைவ உணவு வேண்டும், என்றால் அசைவம் சமைக்கும் வீட்டிலிருந்து டெலிவரி செய்யப்படும்.

உலகத்தின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும், உங்கள் பெற்றோரின் உணவு தேவையை fooddoo.com தீர்த்து வைக்கும். நீங்க அமெரிக்கால இருந்துக்கிட்டே அண்ணா நகர்ல இருக்குற உங்க அப்பா அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க முடியும். மிகவும் பாதுகாப்பான முறையில், சுவையையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த உணவுகள் உருவாக்கப்படுகிறது.

இதன் மூலம் நேரம் தவறாமல் காலை, மதியம், இரவு உணவு நமக்கு அலுவலகத்திற்கே வந்து சேர்ந்துவிடும். வெளிநாட்டில் இருக்கும் நபர்கள் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கு சந்தா செலுத்தவும் இதன் மூலம் முடியும். fooddoo.com உங்களுக்காக உருவாக்கப்பட்டது.

Fooddoo.com gives you a variety of homemade foods in a traditional taste

அதேபோல் பிறந்தநாள் விழா, வீடு குடியேறும் விழா ஆகியவற்றுக்கு இவர்கள் உணவு தயாரித்து கொடுக்கிறார்கள். இதனால் பல பேர் எக்கசக்க திருப்தி அடைந்துள்ளனர். இதை குறித்து அவர்கள் fooddoo.com இணையத்தில் பின்னுட்டமும் அளித்துள்ளனர்.

அதேபோல் இவர்களின் கஸ்டமர் கேரின் மூலம் மக்களுக்கு எந்நேரமும் இந்த ஆப் மற்றும் இணையம் குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. இனியும் ஏன் லேட் பண்ணுறீங்க.. உடனே ஆர்டர் பண்ணி அம்மா கையால சந்தோசமா சாப்பிடுங்க பாஸ்!

கூடுதல் விவரங்கள்

1. உங்கள் வீட்டிற்கு வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை கொண்டு வருகிறது.

2. உங்கள் அம்மாவின் உணவுகளை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்.

3. உங்கள் உடலை குப்பை உணவுகள் சாப்பிட்டு வீணடிக்க வேண்டாம்.

4. மேற்கத்திய உணவுகளை துறந்து நம்முடைய சொந்த கிராமத்து உணவுகளை நோக்கி மீண்டும் செல்வோம்.

5. நாங்கள் டயட் உணவுகளை அளிக்கிறோம்.

6. அதேபோல் அதிக புரதம் நிறைந்த பழைய கால உணவுகளையும் நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.

7. தனியாக இருக்கு உங்களின் பெற்றோருக்கும் நீங்கள் உணவை ஆர்டர் செய்யலாம்.

8. பராம்பரிய இனிப்புகளுடன் நீங்கள் உங்கள் வீட்டு விழாவிற்கும் உணவுகளை ஆர்டர் செய்யலாம்.

இதன் ஆண்ட்ராய்டு ஆப்பை தரவிறக்கம் செய்ய: https://goo.gl/HVs81S

ஐபோன் ஆப்பை தரவிறக்கம் செய்ய: https://goo.gl/eM2kxs

இவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள: +91 9445502121, 044 45002121

 
 
 
English summary
Fooddoo.com gives you a variety of homemade foods in a traditional taste.Here they have a concept called mom’s - handpicked house wives who cook food for you along with their family.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more