சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா ரீஎன்ட்ரி.. எங்களுக்கு பொருட்டேயில்லை.. கடுமையாக எதிர்க்கும் முன்னாள் அமைச்சர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு வந்து அதிரடி காட்டினார். சசிகலா சென்னைக்கு வந்தவுடன் அதிமுக தொண்டர்களை சந்திப்பார் என தகவல்கள் பரவியதால் ஓபிஎஸ், இ.பி.எஸ் ஆடிப்போனார்கள்.

Recommended Video

    நாம் ஒன்றானால் கழகம் நன்றாக இருக்கும்...ஓபிஎஸ்., இ.பி.எஸ்க்கு சசிகலாவின் மறைமுக அழைப்பு!

    ஆனால் சென்னை வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அமைதி கொண்டார். அப்போதுதான் அதிமுக தலைமை மூச்சு விட ஆரம்பித்தது. அதிமுக தேர்தலில் தோற்றவுடன் மீண்டும் அதிரடியை கையில் எடுத்துள்ளார் சசிகலா.

     'இதுதான் கடைசி சான்ஸ்.. இதைவிட்ட அவ்வளவுதான்..' சோனியா காந்திக்கு நவ்ஜோத் சித்து எழுதிய பரபர கடிதம் 'இதுதான் கடைசி சான்ஸ்.. இதைவிட்ட அவ்வளவுதான்..' சோனியா காந்திக்கு நவ்ஜோத் சித்து எழுதிய பரபர கடிதம்

    சசிகலா ரீஎன்ட்ரி

    சசிகலா ரீஎன்ட்ரி

    கடந்த சில மாதங்களாக அதிமுகவினரை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. தற்போது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரமாக இறங்கி விட்டார். அ.தி.மு.க 50-வது பொன்‌ விழாவில் அடியெடுத்து வைத்திருப்பதால் சசிகலா. அண்ணா, எம்.ஜி.ஆர் , ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர். இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

    ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.சுக்கு அழைப்பு

    ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.சுக்கு அழைப்பு

    இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற சசிகலா, அதிமுக பொன்விழா ஆண்டு கொடியை ஏற்றினார். இதன்பின்னர் நிருபர்களை சந்தித்த சசிகலா, ''அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் பொறுப்பு. மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டியது நேரமிது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். நமக்குத்தேவை ஒற்றுமைதான்; நீரடித்து நீர் விலகாது'' என்று கூறி ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.சுக்கு அழைப்பு விடுத்தார்.

    முன்னாள் அமைச்சர்கள்

    முன்னாள் அமைச்சர்கள்

    சசிகலா ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.சுக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவருக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ''சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியை சிறப்பாக வழிநடத்தி வெற்றி நடை போட்டு வருகின்றனர்'' என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

    அ.தி.மு.க. வை ஒன்றும் செய்ய முடியாது

    அ.தி.மு.க. வை ஒன்றும் செய்ய முடியாது

    முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், 'பண்ருட்டி ராமசந்திரன், நெடுஞ்செழியன், உள்ளிட்ட பெரிய தலைவர்களை பார்த்த இயக்கம் அதிமுக, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று இடம் தெரியாமல் போயிட்டார்கள், ஆகவே மீண்டும் சொல்கிறேன். நிஜமாக இருந்தவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. சசிகலா நீங்கள் நிழல். உங்களால் அ.தி.மு.க. வை ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறினார்.

    இது கொசு

    இது கொசு

    இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறுகையில், ' யானை பலம்கொண்ட அதிமுகவை கொசு தாங்கியிருப்பதாகக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. அவரால் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. சசிகலா நடிப்புக்கு ஆஸ்கர் கொடுக்கலாம்' என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former ADMK ministers have strongly opposed Sasikala's call for OPS and EPS. Former minister Jayakumar said the ADMK could do nothing with Sasikala
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X