• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"எனக்கு பிடிக்கவில்லை".. வெளிப்படையாக விளாசிய செந்தில்.. வளைத்து போட்ட முருகன்.. என்ன சசிகலா காரணமா?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் ஸ்டார் பேச்சாளராக வலம் வந்த நடிகர் செந்தில்.. அமமுக சென்று.. தற்போது திடீரென பாஜகவில் ஐக்கியம் ஆகிவிட்டார். திடீரென இவர் பாஜகவில் சேர ஒரு முக்கிய காரணம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன!

    பாஜகவில் இணைந்தார் நடிகர் செந்தில்.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பிரபலங்களை இழுத்து போடும் பாஜக - வீடியோ

    சினிமாவிற்கு வெளியே நடிகர் செந்திலின் அரசியல் வாழ்க்கை என்றாலே பலருக்கும் அதிமுகதான் நினைவிற்கு வரும். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக தமிழகம் முழுக்க சுற்றித்திரிந்தவர்தான் செந்தில். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிகம் விரும்பிய நட்சத்திர பேச்சாளர்களில் இவரும் ஒருவர் .

    ஜெ. இருந்த சமயத்தில் பொதுத்தேர்தல் மட்டுமின்றி இடைத்தேர்தல்களிலும் சில முறை இவர் பிரச்சாரங்களை மேற்கொண்டு இருக்கிறார். சினிமா பிரபலம் என்பதாலும், காமெடியாக எதிர்கட்சிகளை கலாய்ப்பார் என்பதால் போகிற இடங்களில் எல்லாம் இவருக்கு கூட்டம் அள்ளும்.

    சினிமா

    சினிமா

    தன்னுடைய 13 வயதில் 1964ல் இவர் சென்னைக்கு வந்த போது பெரிய அளவில் அரசியல் மீதெல்லாம் ஆர்வம் இல்லை . நாடகம் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. சினிமா உலகில் கவுண்டமணி - செந்தில் ஜோடி உச்சத்தில் இருந்த சமயம் இவருக்கு லேசாக அரசியல் ஆசைகள் துளிர்விட்டதாம்... அதன்பின் சினிமாவில் "டவுன்" ஆக.. எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு அரசியலுக்குள் நுழைந்துவிட்டார்.

    அரசியல்

    அரசியல்

    அதிமுகவில் இணைந்த இவர் அங்கு நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். அப்போதே சசிகலா, தினகரன் ஆகியோருக்கும் இவர் நெருக்கமாவே இருந்தார். இதனாலோ என்னவோ ஜெயலலிதா மறைவுக்கு பின் செந்தில் திடீர் என்று அதிமுகவில் ஓரம்கட்டப்பட.. அப்படியே செந்தில் அமமுக பக்கம் சென்றார். அங்கும் அவருக்கு அமைப்பு செயலாளராக பதவி வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின் அரசியலில் பெரிய அளவில் இவர் முன்னேற்றம் எல்லாம் அடையவில்லை.

    அமைதி

    அமைதி

    இதையடுத்து கொஞ்ச நாட்கள் அமமுகவில் அமைதியாக இருந்தவர் சசிகலாவின் வருகைக்காக காத்து இருந்தார். சசிகலா வந்தால் எல்லாம் சரியாகிவிடும். மீண்டும் தனக்கு மரியாதை கிடைக்கும். ஜெயலலிதா தன்னை நடத்தியது போல சசிகலாவும் நடத்துவார் என்று இவர் நம்பினாராம்.

    ஆனால்

    ஆனால்

    ஆனால் சசிகலா வந்தபின், அரசியலே வேண்டாமென்று விலகிவிட்டார். அதேபோல் அமமுகவிலும் இவருக்கு சீட் கிடைப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.இதனால் அமமுகவில் இருந்தால் எதிர்காலம் இருக்காதோ என்று அச்சத்தில் தற்போது பாஜகவிற்கு இவர் சென்றதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எப்படி?

    எப்படி?

    பாஜகவில் இணைந்த செந்தில்.. அதிமுகவில் இருக்க பிடிக்கவில்லை. ஜெயலலிதா இருந்த போது எனக்கு மரியாதை இருந்தது. இப்போது இல்லை . இதனால் பாஜகவில் இணைந்துவிட்டேன். இங்கு மக்களுக்கு சேவை செய்ய முடியும். ஊழலற்ற ஆட்சி அமைக்க முடியும். தற்போது பாஜக எனக்கு நல்ல கட்சியாக தோன்றியது. அதனால் பாஜகவில் இணைந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

    பாஜக எப்படி

    பாஜக எப்படி

    பாஜக எல். முருகன் தமிழக திரையுலகில் இருக்கும் பிரபலங்களை தேடி பிடித்து கட்சியில் சேர்த்து வருகிறார். மக்கள் மத்தியில் கட்சியை பிரபலங்களை வைத்தே பிரபலப்படுத்த திட்டமிட்டு உள்ளார். இதன் ஒரு கட்டமாகவே இவர் செந்திலையும் வளைத்து போட்டதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்றாலும் கட்சிக்குள் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்கிறார்கள் !

    English summary
    Former AIADMK star campaigner Senthil joins in the BJP party after not getting much attention
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X