சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபரப்பு ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆஜர்.. துருவி துருவி விசாரணை

Google Oneindia Tamil News

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.

Recommended Video

    DVAC அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்

    சென்னை ஆலந்தூரிலுள்ள அலுவலகத்தில் விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    கடந்த ஜூலை 22ம் தேதி அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

    எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி.. இப்ப சி.விஜயபாஸ்கர்.. ரெய்டு சரி.. அடுத்து எதுவும் நடக்காதோ? எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி.. இப்ப சி.விஜயபாஸ்கர்.. ரெய்டு சரி.. அடுத்து எதுவும் நடக்காதோ?

    விஜயபாஸ்கர் மீது விசாரணை

    விஜயபாஸ்கர் மீது விசாரணை

    இந்த சோதனையில் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

    லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

    மேலும், இதுதொடர்பாக விஜயபாஸ்கர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், கடந்த செப்டம்பர் 30ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் நேரில் ஆஜராகுமாறு எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பினர்.

    உள்ளாட்சித் தேர்தல்

    உள்ளாட்சித் தேர்தல்

    இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி நேரில் ஆஜராக முடியாது என விஜயபாஸ்கர் தரப்பில் விலக்கு கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று, விலக்கு வழங்கப்பட்டது. விஜயபாஸ்கர் அக்டோபர் 25ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

     தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    இந்நிலையில்தான், சம்மனை ஏற்று, சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    MR Vijayabaskar Latest News in Tamil: Former Tamil Nadu Transport Minister MR Vijayabhaskar appear before the DVAC today at 11 am in connection to the disproportionate assets case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X