சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அறிவாலயத்தில் "அண்ணன் எடப்பாடியார்".. ஜம்ப்படித்த பதட்டத்தில்... டங் ஸ்லிப்பான லட்சுமணன்!!

தமிழக அரசு வலுவான தலைமையின் கீழ் அமையவேண்டும். எனவேதான் நான் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.எந்தப் பதவியும் எதிர்பார்த்து நான் வரவில்லை என்று திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் கூறி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு வலுவான தலைமையின் கீழ் நடைபெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திமுகவில் என்னை இணைத்து கொண்டேன் என்று அதிமுகவின் முன்னாள் எம்.பி லட்சுமணன் கூறியுள்ளார். தற்பொழுது நடைபெறும் அதிமுக ஆட்சி காட்டாற்று வெள்ளம் போல் நடந்து கொண்டு இருக்கிறது. அதில் தத்தளிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலாளரும் விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும் மாவட்ட மருத்துவ அணி முன்னாள் செயலாளருமான டாக்டர் இரா.இலட்சுமணன், இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தப் பதவியும் எதிர்பார்த்து நான் வரவில்லை என்று தெரிவித்தார்.

Former AIADMK Rajya Sabha MP Lakshmanan press meet at Anna Arivalayam

தற்பொழுது நானும் முக்கிய நிர்வாகிகள் 15 பேர் கலந்து கொண்டு இணைந்துள்ளோம். கொரோனா நோய்ப் பரவல் குறைந்த பின், 5 ஆயிரம் 10 ஆயிரம் பேரை திரட்டி இணைப்பு விழாவை நடத்த உள்ளோம்.

என்னை அரவணைத்து கழக பணி ஆற்றிட கழகத் தலைவர் ஸ்டாலின் திமுகவில் இணைத்ததற்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களுக்கும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள்அமைச்சர்பொன்முடி அவர்களுக்கும், கழகப் பொருளாளர் அவர்களுக்கும் தலைமை கழக நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இனி திமுக தலைவர் வழிகாட்டுதலின்படி ஆலோசனையும் தீவிரமாக பணியாற்றி வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாண்புமிகு தளபதி அவர்கள் முதல்வராக அரியணை ஏற அயராது பாடுபடுவோம். தமிழக அரசு வலுவான தலைமையின் கீழ் அமையவேண்டும். எனவேதான் நான் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.எந்தப் பதவியும் எதிர்பார்த்து நான் வரவில்லை.

திமுகவில் ஐக்கியமானார் அதிமுக மாஜி எம்.பி. லட்சுமணன்! திமுகவில் ஐக்கியமானார் அதிமுக மாஜி எம்.பி. லட்சுமணன்!

கொரோனா நிகழ்வினால் (!) வைரஸ் தொற்றை நிகழ்வு என்று சொல்லி உளறிய அவர், தமிழக மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் முதல்வர் யார் என்ற போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதிலிருந்தே மக்கள் பிரச்சினையை யார் கவனிக்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிகிறது என்றார்.

அதிமுக ஆட்சி காட்டாற்று ஆட்சி போல ஓடிக்கொண்டிருக்கிறது அங்கிருந்து தத்தளிக்க விருப்பமில்லை என்று கூறினார். பேட்டியின் நடுவே நடுவில் பழக்க தோஷத்தில் அண்ணன் எடப்பாடியார் என்று ஒரு தடவை சொல்லி சுதாரித்த லட்சுணமன், இனி திமுக தலைவர் வழிகாட்டுதலின்படி ஆலோசனையும் தீவிரமாக பணியாற்றுவோம் என்று சொன்னார்.

English summary
Former AIADMK MP Lakshmanan has said that he joined the DMK for the sole reason that the Tamil Nadu government should be held under strong leadership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X