• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

திமுக மாஜி அமைச்சர் கழுத்தில்.. சிலுவை தொங்கும் ஜெபமாலையா.. பரபரப்பை கிளப்பும் திண்டுக்கல்..!

Google Oneindia Tamil News

சென்னை: சிலுவை தொங்கும் ஜெபமாலையை ஒரு திமுக மாஜி அமைச்சர் அணிந்துள்ளாராம்.. இதுதான் தற்போது பரபரப்பாக கசிந்து வரும் தகவலாகும்.
ஆரம்ப காலத்தில் இருந்தே, பகுத்தறிவு பிரசாரம் செய்தே கட்சியை வளர்த்தது திமுக... ஆனால், கருணாநிதி இறந்தபிறகு இந்த நிலைப்பாடு சற்று தளர்ந்துள்ளதாகவே கூறப்பட்டது.. அதாவது இந்துக்களுக்கு தாங்கள் எதிரி இல்லை என்பதை காட்டிக் கொள்ளும் பேச்சுகள் அடிக்கடி வெளிவந்தன.

அதற்கேற்றார்போல், துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு போவது நிறைய நடந்தது.. கலைஞர் உயிருடன் இருக்கும்போது, இந்த அளவுக்கு போககாதவர், இப்போது ஏன் கோயில் கோயிலாக சுற்றுகிறார், ஜோசியக்காரரை வீட்டுக்கு வரவழைத்து பேசுகிறார் என்ற கேள்விகளும் எழுந்தன.

உலக அளவில் கொரோனாவுக்கு 53,066,137 பேர் பாதிப்பு.. இந்தியாவில் பாதிப்பு 87 லட்சத்தை தாண்டியதுஉலக அளவில் கொரோனாவுக்கு 53,066,137 பேர் பாதிப்பு.. இந்தியாவில் பாதிப்பு 87 லட்சத்தை தாண்டியது

உதயநிதி

உதயநிதி

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் கனிமொழி தேர்தலில் நிற்கும்போது, ராஜாத்தி அம்மாள் கோயிலுக்கு போய் வேண்டி கொள்வார்.. இதை கேட்டால், அது என் அம்மாவின் நம்பிக்கை என்று பதிலளிப்பார்.இந்த விவகாரத்தில், உதயநிதியும் விலக்கல்ல.. பிள்ளையார் போட்டோவை நடுராத்திரி ட்விட்டரில் போஸ்ட் செய்துவிட்டு, "அது என் அம்மாவுடைய பிள்ளையார்.. அவங்க வாங்கிய சிலையை பார்த்து என் மகள் ஆசைப்பட்டாள்.. அவளுக்காக, அவள் திருப்திக்காக போஸ்ட் செய்தேன்" என்று காரணம் சொன்னார். ஆனால், "இப்படி பிள்ளையாரை காட்டி ஓட்டு வாங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டதே திமுக" என்றுதான் பேச்சுதான் எடுபட்டது.

திராவிட சித்தாந்தம்

திராவிட சித்தாந்தம்

இது எல்லாவற்றுக்கும் மேலாக, பிரசாந்த் கிஷோரை உள்ளே கொண்டு வந்ததில் இருந்தே இந்து மத அரசியல் தலைதூக்குவதாக பலமுறை தகவல்கள் கசிந்தன.. திராவிட சித்தாந்தத்தில் ஊறி போனவர்கள் இதை பார்த்து மிரண்டுதான் போனார்கள்.. இந்து கடவுளை கையில் எடுத்துவிட்டதோ திமுக என்ற சந்தேகம் வலுவாக எழ ஆரம்பித்தது!

யார் அவர்?

யார் அவர்?

இப்படி இந்த விவகாரமே அடங்காத நிலையில்தான், இன்னொரு தகவல் கசிந்து வருகிறது.. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், தன் கழுத்துல, சிலுவை தொங்கும் ஜெப மாலையை அணிந்திருக்கிறாராம்.. இந்த தேர்தலில் எப்படியும் சீட் கிடைத்து, மறுபடியும் அமைச்சராக வேண்டும் என்பதற்காகவே இந்த ஜெபமாலை என்கிறார்கள். ஆனால் இதை பற்றி யாரேனும் கேட்டால், சிலுவையை ஏன் மத அடையாளமாக பார்க்க வேண்டும்? உணர்வுபூர்வமாக பார்க்கலாமே என்று விளக்கமும் தருகிறாராம்.. இதைதான் சிலர் விமர்சித்து அரசியலாக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.

தனிநபர் உரிமை

தனிநபர் உரிமை

இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையே தெரியவில்லை.. அப்படியே இருந்தாலும், சாமி கும்பிடுவதும், கும்பிடாததும் இது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது.. நம்பிக்கை சார்ந்த விஷயம்.. ஒருவரை போல இன்னொருவர் இருக்க வேண்டிய கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இல்லை.. இது தார்மீக உரிமையும்கூட.. இப்படி ஜெபமாலை கழுத்தில் அணிந்த விஷயத்தை எடுத்து வைத்து கொண்டு, அரசியலாக்கும் முயற்சியில் சிலர் இறங்கி வருவது மலிவான விமர்சனத்தையே எதிரொலித்து வருவதாக கூறப்படுகிறது!

English summary
Former Dindigul DMK minister wearing rosary
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X