சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொல்லாம விடமாட்டோம்! தூங்க விடாமல் மிரட்டல்கள்! பாதுகாப்பு கொடுங்க! போலீசுக்கு ஓடிய சி.வி.சண்முகம்!

Google Oneindia Tamil News

சென்னை : பரபரப்புகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிவடைந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் எடப்பாடி ஆதரவு நிர்வாகியுமான சிவி சண்முகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    cv Shanmugam ஆவேசம் | அந்த பதவியெல்லாம் காலாவதி ஆகிவிட்டது

    சண்டை, சச்சரவுகள், நீதிமன்றம், காவல்துறை கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ஏற்கெனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    தலையை வெட்டிவிடுவோம்.. முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் தலையை வெட்டிவிடுவோம்.. முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்திற்கு கொலை மிரட்டல்

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    இதனால் இதனால் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாமல் போனதால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர். இது இபிஎஸ் தரப்புக்கு லேசான பின்னடைவாகக் கருதப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன்மொழிந்து, ஈபிஎஸ் வழிமொழிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார்.

    விழுப்புரம் சிவி சண்முகம்

    விழுப்புரம் சிவி சண்முகம்

    மேலும் ஒபிஎஸ், இபிஎஸ் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் கூறிய சிவி சண்முகம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், அவருக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலம் ஆபாசமாகப் பேசி கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி அவரின் வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த வழக்கறிஞர் பால முருகன், "சண்முகத்திற்கு கடந்த சில தினங்களாக கொலை மிரட்டல் விடுத்து பல செய்திகள் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளும் அழைப்புகளும் வருகின்றன.

    பாதுகாப்பு வாபஸ்

    பாதுகாப்பு வாபஸ்

    இதனால் காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபுவிடம் புகார் மனு அளித்துள்ளோம். புகாரை விசாரித்து அவர்களை கைது செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்" என்று கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சிவி சண்முகத்துக்கு வழங்கப்பட்டு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Following the AIADMK general body meeting, a complaint has been lodged with the DGP that former minister and pro-Edappadi executive cv Shanmugam was receiving death threats over the phone and that he should be given protection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X