சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதெப்படிங்க...சசிகலாகிட்ட சரணடைஞ்சீங்க..ஏத்துக்கவே முடியலை...ஓபிஎஸ் முன் பொங்கிய 'நத்தம்' விஸ்வநாதன்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவிடம் நீங்க சமாதானமாக போக முடிவு செய்ததாலே தாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறேன் என ஓ.பன்னீர்செல்வத்திடம் காட்டமாக சொல்லியிருக்கிறாராம் மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் ஐவரணியில் முப்பெருந்துறை அமைச்சராக இருந்த கோலோச்சியவர் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல் மாவட்டத்தையே தனது கோட்டையாக வைத்து கொடிகட்டிப் பறந்தார்.

நத்தம் விஸ்வநாதனின் அரசியல் எழுச்சியில் இன்றைய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் இருந்த இடமே தெரியாத காலம் ஒன்று இருந்தது. ஆனால் 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நத்தம் விஸ்வநாதனுக்கு எல்லாமும் இறங்குமுகமாகிப் போனது.

செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டு ஓ.பி.எஸ். தி கிரேட் எஸ்கேப்- நீடிக்கும் சஸ்பென்ஸ்! செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டு ஓ.பி.எஸ். தி கிரேட் எஸ்கேப்- நீடிக்கும் சஸ்பென்ஸ்!

தோற்பார் என்பதற்காக வேட்பாளர்

தோற்பார் என்பதற்காக வேட்பாளர்

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியை ஒதுக்கி முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்டாக வேண்டும் என அதிமுக தலைமை நெருக்கடி கொடுத்தது. தோற்றுப் போகட்டும் என்ற ஒரே காரணத்துக்காக தேர்தலில் நிறுத்தப்பட்ட ஒரே வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன். அந்த அளவுக்கு அவரை பந்தாடியது சசிகலா குடும்பம்.

நத்தம் வனவாசம்

நத்தம் வனவாசம்

இதனால் தேர்தல் முடிந்தபின்னர் ஏறத்தாழ அதிமுகவைவிட்டே விலகிய நிலையில் இருந்தார் நத்தம் விஸ்வநாதன். ஆனால் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காரணத்தால் மீண்டும் தலைகாட்டினார் நத்தம். ஓபிஎஸ் அணியில் நத்தம் விஸ்வநாதன் முக்கிய பங்கு வகித்தார். பின் அணிகள் இணைந்த நிலையிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் அவரால் பாலிட்டிக்ஸ் செய்ய முடியாத அளவுக்கு முட்டுக்கட்டைகள்.

மீண்டும் ஏறுமுகம்

மீண்டும் ஏறுமுகம்

இச்சூழலில்தான் திண்டுக்கல் மாவட்டத்தையே இரண்டாகப் பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக்கப்பட்டார் நத்தம் விஸ்வநாதன். இது முழுவதும் எடப்பாடியின் ஆதரவால் நடைபெற்றது. இதற்காகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இப்போது நத்தம் விஸ்வநாதன் ஆதரிக்கிறார்.

சசிகலாவிடம் சரணா?

சசிகலாவிடம் சரணா?

இதனிடையே துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த நத்தம் விஸ்வநாதன், சசிகலாவுக்கு எதிராகத்தானே நாம நின்னோம்.. இப்ப நீங்களே அவங்ககிட்ட போய் பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருப்பது நல்லா இல்லை.. என்னதான் இருந்தாலும் 'நாம யாரு'ன்னு நினைச்சுகூட பார்க்காம எவ்வளவு அவமானப்படுத்தப்பட்டிருப்போம்.. அவங்ககிட்டே போய் மறுபடியும் நாம நிற்கிறது சரி இல்லைங்க.. என படபடவென குமுறிவிட்டுதான் வெளியேறினாராம் நத்தம்.

English summary
Former Minsiter Natham Viswanathan was very angry over Deputy Chief Minsiter O Panneerselvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X