சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்பி சீட் தரல.. ராஜ்ய சபா சீட் சந்தேகம்.. சோகத்துடன் அதிமுக கூட்டத்துக்கு வந்த மைத்ரேயன்!

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு மைத்ரேயன் சோகமாக வந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ்- ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ

    சென்னை: சோகம் என்றால் சோகம் அப்படி ஒரு சோகம் மைத்ரேயன் முகத்தில்.. அதிமுக தலைமை கழகத்துக்கு வந்தவர் முகத்தில் குழப்பம், கவலை, ஏமாற்றம் என பல உணர்வுகள் அப்பி கிடந்ததை பார்க்க முடிந்தது!

    மைத்ரேயனை பொறுத்தவரை, இவர் ஒரு பக்கா பாஜகவின் அபிமானி. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவுடன் நல்ல புரிந்துணர்வு தொடர்பு வைத்திருந்தவர்.

    தனிப்பட்ட முறையில் இவர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா, அதனால்தான் ஏற்கனவே 2 முறை எம்பியாக இருந்த நிலையிலும், கடந்த முறையும் வாய்ப்பு தந்தார். இதனால் பாஜக-அதிமுக கூட்டணிக்கு இடையே ஒரு பாலமாகவும் செயல்பட்டார் மைத்ரேயன்.

    "பொதுச்செயலாளர்" எடப்பாடியாரே வருக.. அதிமுகவில் வெடித்து கிளம்பியது அடுத்த போஸ்டர் சர்ச்சை!

    பெரிய லிஸ்ட்

    பெரிய லிஸ்ட்

    ஆனால் எம்பி தேர்தலில் போட்டியிட ஆசையாக இருந்தார், தென்சென்னை, மத்திய சென்னை, இதில் ஏதாவது ஒன்றில் சீட் தந்தால் போட்டியிட எண்ணினார். ஆனால் இவருக்கு சீட் தரப்படவில்லை. இதையடுத்து, ராஜ்ய சபா சீட்டுக்காக கேட்டு காத்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே தம்பிதுரை, கோகுலஇந்திரா, அன்வர்ராஜா என லிஸ்ட் பெரிசாக உள்ள நிலையில், அதிமுக தலைமை இவரது எண்ணத்தை எந்த அளவுக்கு பரிசீலிக்கும் என்று தெரியவில்லை.

    பாஜக நிழல்

    பாஜக நிழல்

    அது மட்டுமில்லை.. இவர் என்னதான் அதிமுகவில் இருந்தாலும் பாஜகவின் பிம்பம் என்பதை முழுசாக உடைத்தெறிய முடியவில்லை என்பது பெரிய மைனசாக உள்ளது. எனினும் ராஜ்ய சபா விஷயத்திலும் மைத்ரேயன் அப்செட் என்றே சொல்லப்படுகிறது.

    மா.செ. கூட்டம்

    மா.செ. கூட்டம்

    ஏற்கனவே அதிமுகவில் முக்கியத்துவம் தரப்படாத நிலையில், எம்பி சீட்டும் தராத நிலையில், ராஜ்ய சபா சீட்டுக்கும் பரிந்துரைக்காத நிலையில், கடுமையான அதிருப்தியில் மைத்ரேயன் உள்ளார் போலும். இந்த சூழலில்தான் இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு மைத்ரேயன் வந்திருந்தார்.

    கலகலப்பு

    கலகலப்பு

    தலைமைக் கழகத்துக்கு இவர் வரும்போதே வாடிய முகத்துடன் காணப்பட்டார். வெளியே உள்ள வளாகத்தில் தனியாக நின்று கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. வழக்கமான உற்சாகம், கலகலப்பு அவரிடம் தென்படவில்லை. ஏற்கனவே நொந்து போன நிலையில், இனி நடக்க போகும் கூட்டத்தில் எந்த மாதிரியான தனது நிலைப்பாட்டை எடுத்து வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

    English summary
    Former MP Maitreyan was seen with sadness in AIADMK Head Office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X