சென்னை : திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு அவரது சிலையை திறந்து வைக்க இருக்கிறார்.
கலைஞர் என அழைக்கப்படும் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும், வகையில் கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலை திறக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது ஓமந்தூரார் வளாகத்தில் முழு உருவ கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில், கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கவுள்ளார்.
Newest FirstOldest First
7:20 PM, 28 May
தமிழ் தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி - வெங்கையா நாயுடு
7:20 PM, 28 May
என்னுடைய பல நண்பர்களை இந்த விழாவில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி - வெங்கையா நாயுடு
7:19 PM, 28 May
இதுதான் கலாச்சாரம் இதுதான் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா - வெங்கையா நாயுடு
7:18 PM, 28 May
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு நான் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் - வெங்கையா நாயுடு
7:17 PM, 28 May
நன்றி வணக்கம் என்று கூறி சிறப்பு உரையை முடித்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
7:13 PM, 28 May
விவசாயிகள் நலனுக்காக உழவர் சந்தையை நிறுவியவர் கருணாநிதி - வெங்கையா நாயுடு
7:12 PM, 28 May
கருணாநிதியின் முழு உருவச்சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது - வெங்கையா நாயுடு
7:08 PM, 28 May
நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல எனது மொழிக்கு நான் ஆதரவானவன் - வெங்கையா நாயுடு
7:06 PM, 28 May
தமிழக மக்கள் தங்களின் கலை, கலாச்சாரத்தை தொடர்ந்து பின்பற்றுகின்றனர் - வெங்கையா நாயுடு
7:06 PM, 28 May
உலக நாடுகள் பலவற்றிக்குப் போனாலும் நான் இந்த உடையை உடுத்துகிறேன் - வெங்கையா நாயுடு
7:05 PM, 28 May
பல நாட்டு மக்களும் என்னுடைய உடையை பாராட்டுகின்றனர் - வெங்கையா நாயுடு
7:04 PM, 28 May
நான் ஆடை அணிவது பற்றி பலரும் பேசுகின்றனர்.. வேஷ்டி சட்டை அணிய நான் மிகவும் விரும்புகிறேன் - வெங்கையா நாயுடு
7:02 PM, 28 May
தமிழ், தமிழ் காலச்சாரத்தை பெரிய அளவில் ஊக்குவித்தவர் கருணாநிதி - வெங்கையா நாயுடு
7:02 PM, 28 May
பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்றாலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் - வெங்கையா நாயுடு
இன்னும் சற்று நேரத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை திறக்கப்பட உள்ளது
5:14 PM, 28 May
கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும், தொண்டர்களும் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் குவிந்துள்ளனர்
5:14 PM, 28 May
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு வருகை தந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்
5:14 PM, 28 May
கருணாநிதியின் 16 அடி உயர சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்
5:15 PM, 28 May
கருணாநிதி சிலையில் இந்திக்கு எதிராக வாசகம்
வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீர்வோம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி ஆகிய 5 வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன
5:28 PM, 28 May
வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீர்வோம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன
5:28 PM, 28 May
கருணாநிதி சிலையில் 5 வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன
5:30 PM, 28 May
கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் முதல் வரிசையில் ஸ்டாலின் அருகில் அமர்ந்துள்ளார்
5:31 PM, 28 May
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ராசாத்தி அம்மாள் வருகை
5:34 PM, 28 May
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்
5:34 PM, 28 May
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்தார் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு
5:34 PM, 28 May
வெங்கய்யா நாயுடுவுக்கு ஸ்டாலின் வரவேற்பு
5:36 PM, 28 May
கருணாநிதி சிலை திறப்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு
5:37 PM, 28 May
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
5:38 PM, 28 May
கருணாநிதி படத்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மரியாதை செலுத்தினார்
5:39 PM, 28 May
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனதிற்கு நெருக்கமான இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது
5:40 PM, 28 May
உதயநிதி, தயாநிதி மாறனிடம் கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
5:42 PM, 28 May
தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது
5:42 PM, 28 May
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து விட்டு கிளம்பினார் வெங்கையா நாயுடு
Kalaignar Karunanidhi Statue Opening In Chennai (கருணாநிதி சிலை இன்று திறப்பு) LIVE News Updates in Tamil: சென்னை ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். இது குறித்த நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்..