பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் அழகை "Expose" செய்தால்.. அதற்கு பெயர் என்ன தெரியுமா? சபரிமாலா பேச்சு!
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவரும், முன்னாள் ஆசிரியருமான சபரி மாலா தனது கட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து பேசி, போராடி வந்தவர் முன்னாள் ஆசிரியர் சபரிமாலா. இதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர், பின்னர் தனது அரசு வேலையையே தூக்கி எறிந்துவிட்டு முழுக்க முழுக்க நீட் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தார்.
தேனும் தினைமாவும்.. என் பேராசை நிறைவேறுமா?.. வைரமுத்து ட்வீட்
மதுரை ஆத்திகுளத்தில் பிறந்த இவர் நீட் மட்டுமின்றி பல்வேறு சமூக ரீதியான பிரச்சனைகளில் முற்போக்கான கருத்துக்களை தெரிவித்தும் வந்து இருக்கிறார்.

பெண் விடுதலை
முக்கியமாக பெண் விடுதலை, சுதந்திரம் தொடர்பாக பல்வேறு மேடைகளில் மேடை பேச்சாளராக இவர் பேசி இருக்கிறார். இதையடுத்துதான் வருடம் ஜூன் மாதம் இவர் அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கினார். பெண் விடுதலைக் கட்சி என்ற பெயரில் அரசியல் அமைப்பை தொடங்கி இவர் நடத்தி வருகிறது.

சபரிமாலா பெண் விடுதலைக் கட்சி
பெண்களுக்கு அரசியல் அடையாளம் கொடுக்க வேண்டும். பெண்கள் என்றால் வீட்டிலேயே இருக்க வேண்டும். குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். சமையல் அறையில் இருக்க வேண்டும் என்பதை உடைக்கும் விதமாக நான் இந்த கட்சியை தொடங்கி இருக்கிறேன் என்று கட்சி தொடக்க விழாவின் போதே சபரிமாலா பேசி இருந்தார்.

சபரிமாலா வீடியோ
இந்த நிலையில்தான் இவரின் பெண் விடுதலைக் கட்சி கூட்டம் ஒன்றில் சபரிமாலா பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆபாசமா புகைப்படம் வெளியிடுவதை பற்றி சபரிமாலா பேசி உள்ளார். அதில், என்னுடைய படத்தை மேக்கப் போடு போட்டு. எதில் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸில் படத்தை போட்டு.

சபரிமாலா பேஸ்புக்
நான் ரொம்ப அழகாக இருக்கிறேன் என்ற எண்ணத்தில் அதை போட்டு. ரொம்ப அழகா ஒரு படத்தை அப்லோட் செய்து, யாராவது ஒரு ஆண் இதை பார்க்க வேண்டும். லைக் போட வேண்டும், ஹார்டின் விட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் போஸ்ட் போட்டால்.. என்னுடைய அழகை நான் எக்ஸ்போக்ஸ் செய்கிறேன் என்றால் அது.. விபச்சாரம்தான்!, என்று சபரிமாலா தனது உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

எதிர்ப்பு
அவரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது. இவரின் பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பெண்களுக்கு எதிராக அவர் பேசி உள்ளதாக ஒரு சாரார் இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டு, இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தவறு இல்லை
இன்னொருசாரர், இவர் பேசியதில் தவறு இல்லை. சமூக வலைதளங்களில் ஆபாச படம் வைக்க கூடாது என்றுதான் சபரிமாலா சொல்கிறார். படமே வைக்க கூடாது என்று அவர் கூறவில்லை. அவர் தவறாக எதுவும் பேசவில்லை, என்று விளக்கம் அளித்து ஆதரவாக பேசி உள்ளனர்.