அரசு ஊழியர்களுக்கு அடித்த யோகம்: 1 கோடி காப்பீடு, பென்ஷன்.. சொன்னதை செய்த ஸ்டாலின்! லிஸ்ட் பாருங்க
சென்னை: தமிழக அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு சலுகைகளைப் பட்டியலிட்டுள்ளார். அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் அரசு பணியாளர்களின் நலனே அரசின் நலன் எனக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விவரித்துள்ளார்..
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்புக்காக இந்த பாராட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டது.

முதலமைச்சரின் அதிரடி உரை
இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார். "அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டபோது, அவர்களை எடப்பாடி பழனிசாமி எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தினார் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகக் கூட்டணி அமைப்பவர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவாக இருப்பார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
தொடர்ந்து பேசிய ஸ்டாவின் "திமுகவைப் பொறுத்தவரை சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். உங்கள் பாராட்டுகளைப் பெறுவதற்காகவே நாங்கள் உழைக்கிறோம். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்று நான் உறுதி அளிக்கிறேன்..
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர், "உங்களுக்குப் பக்கபலமாக இந்த அரசு என்றும் இருக்கும்" என நெகிழ்ச்சியுடன் சொன்னார். அதுமட்டுமல்லாமல், திமுக அரசில் அரசு ஊழியர்களுக்குப்பட்ட அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் பட்டியலாக வெளியிட்டார்.. அந்த லிஸ்ட் இதுதான்:
அரசுப் பணியாளர்களுக்கான முக்கிய நலத்திட்டங்கள்
- அகவிலைப்படி உயர்வு: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி (DA) உயர்வு, 2022 முதல் ஒன்றிய அரசுக்கு இணையாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி காலதாமதமின்றி ஒன்றிய அரசுக்கு இணையாகத் தொடர்ந்து வழங்கப்படும்.
- ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு: கடந்த ஆண்டு அக்டோபர் முதல், அரசுப் பணியாளர்கள் தங்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
காப்பீட்டுத் தொகை:
- புதிய திட்டத்தின்படி, பணியில் இருக்கும்போது விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் 1 கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 10 இலட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.
- வாரிசுதாரர் கல்வி மற்றும் திருமண உதவி: பணியிடை மரணமடையும் அலுவலர்களின் குழந்தைகளுக்கு திருமணச் செலவிற்காக 5 முதல் 10 இலட்சம் ரூபாயும், உயர்கல்வி பயில 10 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
- திருமண முன்பணம்: அரசுப் பணியாளர்களுக்கான திருமண முன்பணம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- கல்வி முன்பணம்: * தொழிற்கல்விக்கு: 50 ஆயிரத்திலிருந்து 1 இலட்சம் ரூபாயாக உயர்வு.
- கலை மற்றும் அறிவியல் கல்விக்கு: 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்வு.
வீடு கட்டும் முன்பணம்:
- வீடு கட்டுவதற்கான முன்பணத் தொகை 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஓய்வு கால நிம்மதி: ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக ஓய்வு பெறும் நாளன்று தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படும் முறை அகற்றப்பட்டு, பணியாளர்கள் ஓய்வுபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம்:
- ஓய்வூதியப் பணிக்கொடை (Gratuity) 20 இலட்சத்திலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்வு.
- ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீடு 10 இலட்சம் ரூபாயாக உயர்வு.
- பொங்கல் பரிசுத் தொகை 500-லிருந்து 1,000 ரூபாயாக உயர்வு.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெண் ஊழியர்களுக்கான சலுகைகள்
- பெண் அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக (ஓர் ஆண்டு) உயர்த்தப்பட்டுள்ளது.
- பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் (Probationary period) மகப்பேறு விடுப்பு எடுத்தால், அந்த காலத்தையும் தகுதிகாண் பருவமாகவே கருத அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- சிறப்பு ஓய்வூதியம்: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்களின் சிறப்பு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
பணி நிறைவுப் பயன்கள்:
- குறு அங்கன்வாடி மற்றும் வனக்களப் பணியாளர்களுக்கு: 1 இலட்சத்திலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்வு.
- சமையலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு: 50 ஆயிரத்திலிருந்து 1 இலட்சம் ரூபாயாக உயர்வு.
- குடும்ப ஓய்வூதியம்: சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள் இறந்தால், அவர் குடும்பத்திற்கு 1,000 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும், இறுதிச் சடங்கு செலவிற்கு 20,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
- ஆசிரியர்களுக்கான சலுகை: பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications