சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 4 மாவட்டங்களில் சிங்கிள் நோயாளி கிடையாது!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தமிழகத்தில் மொத்தம் 33 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?

    வடக்கே சென்னை முதல் தெற்கே கன்னியாகுமரிவரை பாகுபாடு இல்லாமல் இந்த வைரஸ் பாதிப்பு இருந்தாலும், நான்கு மாவட்டங்களில் இதுவரை பாதிப்பு பதிவாகவில்லை என்ற ஒரு மகிழ்ச்சி செய்தியும் இதனூடே உள்ளது.

    Four districts in Tamilnadu dont have coronavirus patience

    இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அப்போது தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 571 இலிருந்து 621 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

    மேலும், மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த அடிப்படையில் சென்னையில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சென்னை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

    கொரோனா: தனிநபர் இடைவெளியை அக்கறையுடன் பின்பற்றும் ஒடிஷா திராவிடர் பழங்குடிகள் கொரோனா: தனிநபர் இடைவெளியை அக்கறையுடன் பின்பற்றும் ஒடிஷா திராவிடர் பழங்குடிகள்

    இரண்டாவதாக கோவை மாவட்டத்தில் 59, திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேர் பாதிப்படைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

    இருப்பினும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டம் புதுக்கோட்டை மற்றும் புதிதாக உதயமான தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு என்பது இதுவரை பதிவாகவில்லை என்று தெரிகிறது. அந்த வகையில் இது மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.

    English summary
    Four districts in Tamilnadu don't have single coronavirus patient till now says health department statistics that districts are Dharmapuri, Krishnagiri, Pudukkottai and Tenkasi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X