சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 தொகுதி இடைத் தேர்தல்.. 2 திமுக வேட்பாளர்கள் இப்பவே ரெடி.. மிச்ச இரண்டில் நிற்க போவது யாரு!

திமுக சார்பில் 4 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத் தேர்தல்

    சென்னை: 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பாக யார் போட்டியிட போகிறார்கள் என்பது குத்துமதிப்பாக இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது!

    காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சூலூர் சட்டசபைத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததுமே ஆடிப்போனது என்னவோ திமுக தரப்புதான்.

    வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தொகுதிகளில் எப்படியாவது இடைத்தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்றும் திமுக வழக்கு தொடுத்தது. கடைசியில் 4 தொகுதிகளிலும் அடுத்த மாதம், 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    பாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும்.. வரவேற்காவிட்டால்தான் ஆச்சரியம்.. ஸ்டாலின் பாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும்.. வரவேற்காவிட்டால்தான் ஆச்சரியம்.. ஸ்டாலின்

    2 வேட்பாளர்கள்

    2 வேட்பாளர்கள்

    இந்நிலையில், இடைத்தேர்தலை நடத்த இவ்வளவு ஆர்வம் காட்டிய திமுக இந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்த போகிறது என்ற ஆர்வமும் எழுந்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் ரெடி ஆகிவிட்டதைபோல தெரிகிறது. ஒன்று திருப்பரங்குன்றம், மற்றொன்று அரவக்குறிச்சி!

    மனு தள்ளுபடி

    மனு தள்ளுபடி

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது செல்லாது என்றும் தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் சொன்னார். அதன்படி, அதிமுக வெற்றி பெற்றது செல்லாது என கோர்ட் அறிவித்தது. ஆனால் தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரும் சரவணன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

    மீண்டும் சீட்

    மீண்டும் சீட்

    எனவே கடந்த 2016-லேயே திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டியவர் டாக்டர் சரவணன் என்பது திமுகவின் கணிப்பு. அதனால் இவ்வளவு நாள் காத்து கிடந்த சரவணனுக்குதான் மீண்டும் திருப்பரங்குன்றத்தில் சீட் தர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    மீண்டும் சீட்

    மீண்டும் சீட்

    எனவே கடந்த 2016-லேயே திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டியவர் டாக்டர் சரவணன் என்பது திமுகவின் கணிப்பு. அதனால் இவ்வளவு நாள் காத்து கிடந்த சரவணனுக்குதான் மீண்டும் திருப்பரங்குன்றத்தில் சீட் தர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    புதிய பொறுப்பு

    புதிய பொறுப்பு

    அதேபோல அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை வேட்பாளர் செந்தில்பாலாஜிதான் போல உள்ளது. தினகரனின் வலதுகரமாக இருந்தவர், திடீரென கட்சியை எதிர்த்து கொண்டு வந்து திமுகவில் இணைந்தார். அவருக்கு ஸ்டாலினோ புதிய பொறுப்பை தந்து உயர்த்தி அழகு பார்த்தார்.

    விசுவாசம்

    விசுவாசம்

    திமுகவை பொறுத்தவரை செந்தில்பாலாஜியின் "கரிசனம்" கண்டிப்பாக கரூர் மாவட்டத்துக்கு அவசியமான ஒன்றாகும். பசை உள்ள பார்ட்டி என்பதால் சகலமும் சௌரியப்படும் என்பதே திமுகவின் கணக்கு! கட்சி மீது செந்தில்பாலாஜி வைத்துள்ள விசுவாசத்துக்கு பரிசாகவே அரவக்குறிச்சியில் அவர் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.

    ஆலோசனை

    ஆலோசனை

    சூலுார் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை இன்னும் வேட்பாளர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. எப்படியும் திமுகவை சேர்ந்த ஒருவரே பெரும்பாலும் வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே திமுக தரப்பில் பம்பரமாக சுழன்று வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்!

    English summary
    Senthil Balaji chance to compete in Aravakkurichi Assembly by Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X