சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுபஶ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வழக்கு- 4 கூலித் தொழிலாளர்கள் ஜாமீனில் விடுதலை

Google Oneindia Tamil News

Recommended Video

    சுபஸ்ரீ மீது பேனர் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி | Chennai Subashree Accident CCTV Video

    சென்னை: அதிமுக பிரமுகர் ஜெயபஅல் வைத்த பேனர் விழுந்ததால் விபத்து ஏற்பட்டு இளம்பெண் சுபஶ்ரீ பலியான வழக்கில் பேனர் கட்டியதாக கைது செய்யப்பட்ட 4 கூலித் தொழிலாளர்களை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சென்னை அதிமுக பிரமுகர் ஜெயபால் தமது விட்டு திருமணத்துக்காக சட்டவிரோதமாக பேனர்களை சாலைகளில் வைத்திருந்தார். இந்த பேனர்களில் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஶ்ரீ மீது விழுந்தது.

    Four more arrests in Subashree death case

    இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஶ்ரீ மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஶ்ரீ உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சென்னை உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தை கையிலெடுத்து கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜெயபால் 14 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பேனர்கள் மற்றும் கொடிகளை கட்டிய பழனி, சுப்பிரமணி, சங்கர் மற்றும் லட்சுமிகாந்தன் ஆகிய 4 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 4 கூலித்தொழிலாளர்களையும் காவல்நிலையத்திலேயே சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிடப்ப்பட்டது.

    English summary
    Four more were arrested in Chennai Subashree death case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X