சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

Google Oneindia Tamil News

சென்னை: தனியார் பள்ளிகளில், 8 ம் வகுப்பு வரை இலவச கல்வி பயில்வதற்காக, இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகளின் 8 ஆம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணங்களை, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், மத்திய - மாநில அரசுகள் ஏற்கின்றன.

Free education in private schools, The last day to apply on 18th

இந்நிலையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் இடங்களுக்கான ஆன்-லைன் பதிவு கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்திருப்பதாக, கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், வரும் 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான 25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. குறிப்பாக இந்தாண்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சுமார் 1.40 லட்சத்திற்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன.

காஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம் காஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான சாதிசான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அந்தந்த துறையிடம் இருந்து பெற்று தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்.

English summary
Free education in private schools, 84 thousand people have been registered
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X