சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதை நான் வரவேற்கிறேன்.. "ஐயா.. அந்த 15 கோரிக்கைகள்".. எதிர் கேள்வி கேட்ட நெட்டிசன்கள்!

தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "இலவசங்களை பாமக எதிர்க்கிறது என்றாலும், பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள இலவசங்களை தமிழக அரசு வழங்குவதை ஆதரிக்கிறேன், இது தொடர வேண்டும்" என்று டாக்டர் ராமதாஸ் வரவேற்று ட்வீட் போட்டுள்ளார்.. ஆனால் ட்விட்டர்வாசிகளோ, "ஐயா.. கூட்டணி சேரும்போது கொடுத்த அந்த 15 கோரிக்கைகள் பற்றியும் ஒரு நினைவூட்டல் அறிக்கை கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்.. செய்வீங்களா????" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டணி தொடர்பாக 6 மாசத்துக்கு பேச்சே கிடையாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்... மேலும் இப்போதுள்ள அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் தெளிவுபடுத்திவிட்டார்.

அதேபோல, அதிமுகவின் அறிவிப்புகள், திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மனசார வரவேற்று உடனே பாராட்டும் தெரிவித்து விடுவார்.

பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு.. பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு.. "பாண்டே" காலில் விழுந்த திமுக... எச். ராஜா விட மாட்டேங்குறாரே!

ட்வீட்கள்

ட்வீட்கள்

அந்த வகையில், 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. முதல் ட்வீட்டில் "குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நின்று விடும். அதேபோல், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் இதற்கெல்லாம் தேவையிருக்காது!" என்கிறார்.

இலவசங்கள்

இலவசங்கள்

அடுத்து மாநில அரசு அறிவிப்பு குறித்து பதிவிட்ட ட்வீட்டில், "1.பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை இலவசங்களை எதிர்ப்பது தான் என்றாலும், பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணிணி, இலவச மிதிவண்டி போன்ற பயனுள்ள இலவசங்களை நான் தொடர்ந்து ஆதரித்து வருகிறேன். இத்தகைய இலவசங்கள் தொடர வேண்டும்!

வரவேற்பு

வரவேற்பு

2.தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மடிகணிணி அறிவுத்திறனை வளர்க்கும்; மிதி வண்டி உடற்திறனை வளர்க்கும். இந்த நோக்கத்தை மாணவச் செல்வங்கள் புரிந்து கொண்டு அனைத்து வகை உள்ளூர் பயணங்களுக்கும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும். நோயற்ற வாழ்வை உறுதி செய்ய வேண்டும்!" என்றும் வரவேற்றுள்ளார்.

சூப்பர் ஐயா

சூப்பர் ஐயா

இந்த ட்வீட்களுக்கு பலரும் வரவேற்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "என்றென்றும் மக்கள் நலனில் மகத்தான மருத்துவர்" சூப்பர் ஐயா என்று வரவேற்றுள்ளனர்.. ஆனால் பலர் எதிர்பாராத விதமான கமெண்ட்களை பதிவிட்டு உள்ளனர்.. "இலவசங்களை விட மிக கொடூரமானது சாதி அதை முதலில் விட்டு விட்டு அரசியல் செய்யுங்கள்" "இதேபோல் உங்கள் கட்சி எந்த எதிர்பார்ப்புமின்றி இலவசமாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும்" என்கின்றனர்.

நினைவூட்டல்

நினைவூட்டல்

இன்னொருத்தரோ, "உங்கள் ஆதரவுக்கு நன்றி ஐயா.. அப்படியே கூட்டணி சேரும்போது கொடுத்த அந்த 15 கோரிக்கைகள் பற்றியும் ஒரு நினைவூட்டல் அறிக்கை கொடுத்தீங்கனா நல்லாருக்கும் ஐயா. செய்வீங்களா????" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதேபோல வேறு சிலரும் கூட்டணி கூட்டணி குறித்த கேள்விகளையே எழுப்பி வருகின்றனர்.

English summary
free laptops for school students and Dr ramadoss praises tn gov
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X