சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேசன்கடைகளில் நாளை முதல் இலவச மாஸ்க் கொடுக்கறாங்க ஒரு ஆளுக்கு 2 வாங்கிக்கங்க

தமிழகம் முழுவதும் நாளை முதல் ரேசன்கடைகளில் இலவச மாஸ்க் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் ரேசன்கடைகளில் இலவச மாஸ்க் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு யாராவது உடல் நிலை சரியில்லாதவர்கள்தான் மாஸ்க் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் முககவசம் இல்லாமல் யாருமே வெளியே வர முடியாது. கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அவசியம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Free mark distribution in Ration shop from Tomorrow

மாஸ்க் போடாமல் வெளியே சுற்றித்திரிந்தால் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். கிராமங்களில் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அனைவராலும் விலை கொடுத்து மாஸ்க் வாங்க முடியாது என்பதால் ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முக கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

லாக் டவுன் தொடருமா முடியுமா - ஜூலை 29ல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனைலாக் டவுன் தொடருமா முடியுமா - ஜூலை 29ல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

இந்தநிலையில் ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதை கணக்கிடும்போது, தலா ஒருவருக்கு 2 தரமான மறுபடியும் உபயோகிக்கத்தக்கதான 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளது. இவற்றை துவைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

English summary
Tamlnadu Government distribution Cloth Mask For All Ration Card Holders Free Of Cost Tamlnadu Government Order Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X