சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் நாளை முதல் விநியோகம் - மாஸ்க் அவசியம் மாணவர்களே

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 14ஆம் தேதி முதல் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கப்படும்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி புத்தகம் வழங்கும் திட்டத்தை நாளை காலை தொடங்கி வைக்கிறார். அதன்பின் அனைத்து பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புத்தக விநியோகம் தடைப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 14ஆம் தேதி முதல் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி புத்தகம் வழங்கும் திட்டத்தை நாளை காலை தொடங்கி வைக்கிறார். அதன்பின் அனைத்து பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

Free textbooks for 10th and 12th students from Tomorrow

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று யாராலும் சொல்ல முடியாத நிலையில் உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என அரசுப் பள்ளிகள் உள்பட பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 சேனல்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் மாணவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. நாளைய தினம் ஜூலை 14ஆம் தேதி காலை இந்த திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடங்கப்படும்

நோய்த் தொற்று அபாயம் கருதி, புத்தகங்களைப் பெற மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வர வேண்டும் என்பது குறித்துச் சம்பந்தப்பட்ட பள்ளிகள் சார்பில் பெற்றோர்களுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பள்ளிக்குப் புத்தகம் பெற வரும் மாணவர் உள்ளிட்டவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்.மேலும் ஒரு மணி நேரத்தில் 20 பேருக்குப் புத்தகம் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரிசையில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ளும்படி பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

 தமிழக ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12 வது படித்தவர்களுக்கு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி தமிழக ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12 வது படித்தவர்களுக்கு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்படும் என பெற்றோர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12 வது படித்தவர்களுக்கு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி

English summary
Text book distribution from Tomorrow Chief Minister Edapadi Palanisamy innagurate text book distribution and Online classes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X