சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி அப்படி என்ன தப்பா பேசிட்டார்.. கரெக்ட்டா பேசியிருக்கார்.. சப்போர்ட்டுக்கு வந்த எச் ராஜா

Google Oneindia Tamil News

Recommended Video

    The Unknown show with Anandhan Irfath | பக்காவாக ட்யூனாகி விட்ட ரஜினிகாந்த்

    சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வெகுவாக பாராட்டி உள்ளார்.

    சென்னை போயஸ் கார்னில் உள்ள தன்னுடைய இல்லம் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தஅச்சுறுத்தலும் இல்லை. அரசியல் கட்சியினர் சுயலாபத்திற்காகாக இதை தூண்டி விடுகிறார்கள். இந்த நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் நான் குரல் கொடுப்பேன்.மாணவர்கள் சிந்தித்து செயல்படவேண்டும். ஏனெனில் அரசியல் கட்சிகள் மாணவர்களை பயன்படுத்த பார்ப்பார்கள்" என்று கூறினார்.

    Friend Rajinikanths opinion is appreciated: H Raja

    இது குறித்து தனியார் ஊடகத்திடம் கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ விவகாரத்தில் சரியான கருத்தை தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், ஏதேனும் ஒரு குடிமகனுக்கு கூட குடியுரிமை பறிக்கப்படபோகிறது என்பதை சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம்.எந்த குடிமகனுக்கு குடியுரிமை பறிக்கப்படாது என்றார்கள்.

    குடிநீர் பைப்பில் வந்த மது.. 6000 லிட்டர் பீர்.. சரக்கை கொட்டியிருக்காங்க.. கேரளாவில் அதிசயம்குடிநீர் பைப்பில் வந்த மது.. 6000 லிட்டர் பீர்.. சரக்கை கொட்டியிருக்காங்க.. கேரளாவில் அதிசயம்

    சிஏஏ சட்டப்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டிருக்கிறது. யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படவில்லை" என்றார். இது தொடர்பான வீடியோ பதிவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஹெச் ராஜா, நண்பர் ரஜினிகாந்தின் கருத்து பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.

    English summary
    bjp national secretry H Raja tweet that Friend Rajinikanth's opinion is appreciated over CAA remarks
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X