சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல்.. தமிழ்நாடு முழுக்க புதிய ஊரடங்கு தளர்வுகள்.. கவனிக்க வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. 27 மாவட்டங்களில் ஒரு விதமான கட்டுப்பாடும், 11 மாவட்டங்களில் வேறு விதமான கட்டுப்பாடும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் லாக்டவுன் போடப்பட்டது. அதன்பின் கொரோனா கேஸ்கள் குறைய குறைய லாக்டவுனில் தளர்வுகளும் அமலுக்கு வந்தன. ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு வந்தன.

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

இந்த நிலையில் ஜூன் 14 முதல் 21ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் லாக்டவுன் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்

மக்கள்

இன்று லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் பின்வரும் 6 முக்கியமான விஷயங்களை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் தளர்வுகள் அமலுக்கு வரவில்லை.

தளர்வுகள்

தளர்வுகள்

2. டாஸ்மாக் கடைகள் 27 மாவட்டங்களில் மட்டும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதற்கான தனிப்பட்ட விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளி விட வேண்டும், ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது,கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி போட வேண்டும், சில்லரை விற்பனைக்கு மட்டும் அனுமதி என்று மொத்தம் 14 கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

27 மாவட்டம்

27 மாவட்டம்

3. மக்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து 27 மாவட்டங்களில் சலூன்கள் (Beauty Parlour, Saloons. Spas) இயங்கும். 50% பேர் அனுமதிக்கப்படடுவார்கள். காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி இயங்கலாம். 11 மாவட்டங்களில் இந்த கடைகளை திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

4. டீ கடைகளில் பலர் கூடுவதாலும், தமிழ்நாடு முழுக்க பல்வேறு தெருக்களில் டீ கடைகள் இருப்பதாலும், டீ கடைகளுக்கு 11 மாவட்டங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை. 27 மாவட்டங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடைகள்

கடைகள்

5. ஜிம்கள் இயங்காது. ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்பினால் அனுமதிக்கப்படும். அரசு பூங்காவில், விளையாட்டு திடலில் நடைப்பயிற்சி செய்யலாம்.காலை 6 முதல் மாலை 5 வரை இதற்கு அனுமதி அளிக்கப்படும்.

6. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும். இதனால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது, நேரில் விண்ணப்பங்களை தர செல்வது போன்ற பணிகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

English summary
From E Registration to Tasmac: 6 important things to notice in Tamilnadu lockdown rules from tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X