சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிண்டி முதல் மாமல்லபுரம் வரை வேகத்தடைகள் மாயம்.. அழகாக மாறிய சாலைகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi Xi Bharatnatyam In Mahabalipuram Begins -வீடியோ

    சென்னை: சென்னைக்கு வருகை தந்துள்ள சீன அதிபர் நேற்று கிண்டியில் இருந்து மாமல்லபுரம் செல்வதற்காகவே அந்த சாலைகளில் இருந்த அத்தனை வேகத்தடைகளையும் ஒரு சில நாளிலேயே நீக்கியதுடன், புதிதாக சாலைகளும் அமைத்து அழகாக மாற்றியிருக்கிறார்கள் நம் அதிகாரிகள்.

    சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கோ அல்லது பாண்டிச்சேரிக்கோ செல்வதாக இருந்தால் ஈசிஆர் என்று அழைக்கப்படும் கிழக்கு கடற்கரைசாலையைத்தான் மக்கள் பயன்படுத்துவார்கள். அந்த சாலை மிக அழகாக இருக்கும்.

    From guindi to Mamallapuram, speed breakers are missing

    எல்லாருக்குமே இந்த சாலையில் பறந்து செல்ல கொள்ளை விருப்பம். ஆனால் வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போடும் வகையில் ஆங்காங்கே வேகத்தடைகளும் அதிகமாக காணப்படும். இந்த வேகத்தடைகள் பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று சென்னை வந்த சீன அதிபர் கிண்டியில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 57 கிலோமீட்டர் சாலை மார்க்கமாக தனது காரில் பயணம் செய்தார்.

    தஞ்சை.. நாச்சியார் கோவிலிலிருந்து 2 ஸ்பெஷல் பரிசு.. ஜின்பிங்கிற்கு மோடி கொடுக்கும் கிப்ட் இதுதான்!

    இதற்காக தான் வழக்கமாக பயன்படுத்தும் குண்டு துளைக்காத ஹாங்கி எல்-5 என்ற பிரத்யேக காரிலேயே பயணம் செய்தார்.இதற்காக தான் வழக்கமாக பயன்படுத்தும் குண்டு துளைக்காத ஹாங்கி எல்-5 என்ற பிரத்யேக காரிலேயே பயணம் செய்தார்.

    இந்த கார் அதிவேகமாக பயணம் செய்யக்கூடியது என்பதால் காரின் வேகத்தை கருத்தில் கொண்டு கிண்டி முதல் மாமல்லபுரம் வரை சாலைகள் சீர்செய்யப்பட்டு அவற்றில் இருந்து அனைத்து வேகத்தடைகளும் நீக்கப்பட்டன. அதிபர் ஜின் பிங், தனது ஹாங்கி எல்-5 காரிலேயே மாமல்லபுரம் சென்றுவிட்டு சென்னை திரும்பினார்.

    English summary
    china president xi jinping chennai visit: From guindi to Mamallapuram, speed breakers are missing
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X