• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மெர்சல் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாகவே தொடர்ந்து பல்வேறு விஷயங்களிலும் பரபரப்பைக் கிளப்பி வரும் விஜய், தன் மீதான ஆதாரமற்ற விமர்சனங்களுக்கு என்றும் வளைந்து கொடுக்காமல் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் கோடி ரசிகர்களைக் கொண்டிருக்கும் விஜய், சினிமா தாண்டியும் அரசியலிலும் கடந்த சில ஆண்டுகளாக பேசுபொருளாக மாறியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், இது இப்போது 2016க்கு பிறகு தொடங்கியது இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு நடுவில் தான் விஜய் இருந்து வந்துள்ளார்.

கார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா?.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்!.. திக் திக்!கார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா?.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்!.. திக் திக்!

'Time to lead'

'Time to lead'

கடந்த 2011ஆம் ஆண்டு 'காவலன்' தொடங்கி விஜய்யின் பட ரிலீஸ்களின் போது சர்ச்சை ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிப்போனது. அதன் பிறகுத் தலைவா படத்தில் 'Time to lead' என்ற ஒற்றை வரிக்காகத் தமிழ்நாட்டிலேயே படம் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு கத்தி திரைப்படம் ரிலீஸ் ஆன போது லைக்கா தயாரிப்பு குறித்து பிரச்சினை எழுப்பப்பட்டது. ரிலீஸ் தினம் வரை தொடர்ந்து இந்தப் பஞ்சாயத்துக் கடைசி நேரத்தில் தான் தீர்ந்தது.

குறி வைக்கப்படுகிறாரா

குறி வைக்கப்படுகிறாரா

அதன் பின்னர், தமிழ் சினிமாவில் ரஜினி தொடங்கி பலரது படத்தையும் லைக்கா தயாரித்துள்ளது. அப்போதெல்லாம் யாரும் வாய் திறக்கவில்லை. நடிகர் விஜய் மட்டும் குறித்து வைத்து, சிலர் தாக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், இதற்கெல்லாம், விஜய் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. இதன் பின்னர் தான், சினிமா தாண்டி சமூகம் மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு விஷயங்களில் கருத்து கூற தொடங்கினார்.

பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கத்திற்கு அனைவரும் பாராட்டு பத்திரம் மட்டும் வாசித்துக் கொண்டிருந்த போது திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த விஜய், நோக்கத்தைவிட விடப் பாதிப்புகளை அதிகமாகி விடக்கூடாது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதன் மூலம் பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம் என்றும் கூறி பரபரப்பைக் கிளப்பினார். மேலும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க ஏழைகள் சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மெர்சல் சர்ச்சை

மெர்சல் சர்ச்சை

அதன் பிறகு 2017ஆம் ஆண்டு ரிலீஸான மெர்சல் திரைப்படம் பல புதிய பிரச்சினைகளைக் கொண்டு வந்தது. அந்த படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. அதைச் சிலர் மிகப் பெரிய சர்ச்சையாக்கினர். அவரை ஜோசப் விஜய் என்று மத ரீதியாக அவரை அடையாளப்படுத்த முயன்ற சில பாஜக தலைவர்கள், அவரது வாக்காளர் அடையாள அட்டையைக்கூட சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை யாரும் மறந்துவிட மாட்டார்கள். அப்போது பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி அதிகரித்த போதிலும், விஜய் எந்த இடத்திலும் அசைந்து கொடுக்கவில்லை. அந்த பிரச்சினையை விஜய் கையாண்ட விதமும், அதன் பிறகு பிகில் திரைப்படத்தில் வந்த சில குறியீடுகளும் தான் யாரைக் கண்டும், எதற்காகவும் அஞ்சப்போவதில்லை என்ற மெசேஜை அனுப்பும் வகையிலேயே இருந்தது.

'நான் முதல்வரானால்

'நான் முதல்வரானால்"

அதன் பிறகு குறிப்பாக சர்கார் திரைப்பட ஆடியோ வெளியீட்டின் போது, 'நான் முதல்வரானால்" என்று தொடங்கிய அவரது பேச்சில் அனல் பறந்தது. அந்த திரைப்பட வெளியீட்டின்போது, பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதை நாம் கண்டோம். பல்வேறு இடங்களில் நடிகர் விஜய்யின் கட்அவுட்கள் கிழிக்கப்பட்டன. திரைப்படங்களில் தேவையில்லாத சிக்கல்கள் உருவாக்கப்பட்டன. அதையும் மிக நேர்த்தியாகக் கையாண்ட விஜய், தன் ரசிகர்கள் இதனால் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

வருமானவரி சோதனை

வருமானவரி சோதனை

இதைத் தொடர்ந்து கடந்த 2020 பிப்ரவரி மாதம், விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை நடத்தினர். அப்போது நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த விஜய்யையும் அங்கிருந்து அவசரம் அவசரமாகச் சென்னைக்கு அழைத்து வந்தனர். இது மிகப் பெரிய சர்ச்சையானது. ஆனால், இதில் வருமானவரித் துறையினர் எதையும் கைப்பற்றவில்லை. கடைசியில் நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்திற்கு முறையாக வருமான வரி செலுத்தியதாகவே கூறினர்.

நெய்வேலி செல்ஃபி

நெய்வேலி செல்ஃபி

அந்த ரெய்டு சமயத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக ஆயிரக் கணக்கான இளைஞர்கள் நெய்வேலியில் கூடினர். அப்போது வேன் ஒன்றின் மீது இருந்து விஜய் எடுத்த செல்பி ட்விட்டரையே தெறிக்கவிட்டது. கடந்த ஆண்டு அதிகம் ரிட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக அந்த செல்ஃபிதான் இருந்தது. இப்படிக் கடந்த சில ஆண்டுகளாக லேம்லைட்டிலேயே இருக்கும் விஜய், இப்போது ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம் தொடர்பாகவும் மேல்முறையீடு செய்துள்ளார்,

ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ்

அதாவது நடிகர் விஜய் கடந்த 2012இல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியிருந்தார். அதில் நுழைவு வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த சில வாரங்களுக்கு முன் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நுழைவு வரி செலுத்தச் சொன்ன நீதிபதி, "சமூக நீதிக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல நாட்டுக் குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பு" போன்ற கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

தேச விரோதி அல்ல

தேச விரோதி அல்ல

இந்நிலையில், விஜய் தன் மீதான நீதிபதியின் விமர்சனத்தை நீக்க வேண்டும், 1 லட்சம் ரூபாய் அபராதத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்திருந்தார். அப்போது முழுமையான நுழைவு வரியைச் செலுத்தத் தயார் என்று கூறிய அவரது வழக்கறிஞர், தனி நீதிபதி நடிகர் விஜய்யை தேசவிரோதியாக முத்திரை குத்தியுள்ளார் என்றும் அவர் தேச விரோதி அல்ல என்றும் வாதிட்டார். இதையடுத்து தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

தளபதி டூ தலைவர்

தளபதி டூ தலைவர்

இப்படி இந்த ஒரு விவகாரத்தில் மட்டுமில்லை, கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் தன் மீதான ஆதாரமற்ற விமர்சனங்களுக்கு என்றும் வளைந்து கொடுக்காமல் சூப்பராகவே கையாண்டு வருகிறார். சினிமாவில் இளைய தளபதியில் இருந்து தளபதியாக மாறியுள்ள விஜய், அரசியல் களத்திலும் விரைவில் தலைவராக மாற எடுக்கும் முயற்சிகளே இது அடித்துக் கூறுகின்றனர், அவரது நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள்..!

English summary
For a couple of years, Actor Vijay very effectively handled his political problems. This might help his political entry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X