சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயலும் கரையை கடந்தது.. நாமும் இனி பார்டரை கிராஸ் செய்யலாம்.. நண்பகல் முதல் பேருந்துகள் இயக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் கரையை கடந்து விட்டதால் இன்று நண்பகல் 12 மணி முதல் வெளியூர்களுக்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்குகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. இது மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடந்ததால் வடபகுதிகளான சென்னை, கடலூர், மரக்காணம், புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு நல்ல மழை பெய்தது.

மிக அதிக கனமழை முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் நேற்று முன் தினம் முதல் புயலின் பாதையில் வரும் மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

வடசென்னையில் வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொதுமக்கள் கடும் அவதிவடசென்னையில் வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொதுமக்கள் கடும் அவதி

பேருந்து

பேருந்து

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும் சென்னையிலிருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

அரசு முடிவு

அரசு முடிவு

இதனால் விசேஷங்களுக்கான மேற்கண்ட மாவட்டங்கள், சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த மக்கள் அவதி அடைந்தனர். மேலும் சென்னையிலிருந்து திண்டிவனம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு ஆட்டோக்களை அமர்த்திக் கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

பேருந்துகள்

பேருந்துகள்

மேலும் மற்ற இடங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதாகவே குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை நிவர் புயல் கரையை கடந்தது. இதனால் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.

புறநகர்

புறநகர்

அதன்படி இன்று நண்பகல் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அது போல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பேருந்துகளின் இயக்கமும் பயணிகளும் குறைவாகவே உள்ளனர்.

English summary
From Today bus transportation start to 7 districts as Cyclone Nivar crosses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X