சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

20வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு - இன்று எவ்ளோ தெரியுமா

பெட்ரோல், டீசல் கடந்த 20வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.83.37க்கு விற்பனையாகிறது. டீசல் 1 லிட்டர் ரூ.77.44க்கும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயர்ந்து மக்களை அதிர்ச்சியடையச் செய்வது போல பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 20வது நாளாக பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.83.37க்கு விற்பனையாகிறது. டீசல் 1 லிட்டர் ரூ.77.44க்கும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 20 நாட்களில் பெட்ரோல், விலை ரூ.7.83ம் டீசல் விலை ரூ.9.22ஆம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்கள் விலையை குறைக்காமல் இருந்தன.

Fuel prices increase for 20th day, petrol crosses Rs 83 a litre mark in Chennai

82 நாட்களுக்கு பிறகு கடந்த 7ஆம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டுகிறது. அப்போது முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 83.37 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 77.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் உலக பொருளாதாரத்தையே படு பாதாளத்தில் தள்ளியுள்ளது. வேலையிழப்பு, பொருளாதார மந்தநிலை, மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து திண்டாடி வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் கச்சா எண்ணெயிலும் கை வைத்தது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலராக சரிந்தது. பின்னர் படிப்படியாக கச்சா எண்ணெய் உயரத்தொடங்கியுள்ளது.

ஆச்சர்யம்! ஆனால் உண்மை.. வெறும் ஒன்றரை ரூபாய்க்கு பெட்ரோல் விற்கும் நாடு ஆச்சர்யம்! ஆனால் உண்மை.. வெறும் ஒன்றரை ரூபாய்க்கு பெட்ரோல் விற்கும் நாடு

இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை தினசரியும் உயர்த்தி வருகின்றன. ஜூன் 7ஆம் தேதியில் இருந்து பெட்ரோல்,டீசல் உயர்ந்து வருகிறது. 20வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் உயர்ந்துள்ளது. கடந்த 20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.7.83ம் டீசல் விலை ரூ.9.22ம் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளையும் லாரி உரிமையாளர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை உயரும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது.

English summary
The prices of petrol and diesel continued their upward trend for 20th day in a row. On Friday, the petrol was retailing at Rs 83.37 a litre in Chennai and diesel price was Rs 77.44 a litre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X