சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு அமல்.. பால், மருந்தை தவிர அனைத்து கடைகளும் மூடல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று பால், மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.90 லட்சமாக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் நோயின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Full lockdown in Tamilnadu implemented today

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தடுக்கவும் நோய் பரவலை கட்டுப்படுத்தவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழகத்தில் அமல்படுத்தியது.

அந்த வகையில் இன்று 6ஆவது ஞாயிற்றுக்கிழமையாக இன்று அமலாகியது. தமிழகத்தில் இன்று தளர்வில்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் மக்கள் யாரும் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது.

பால், மருந்து கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் அசைவம் சமைப்பது வழக்கம். ஆனால் முழு ஊரடங்கால் மக்கள் சனிக்கிழமையே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டனர்.

இலங்கை தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்த ராஜ்பட்ச.. 4ஆவது முறையாக இன்று பதவியேற்கிறார்!இலங்கை தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்த ராஜ்பட்ச.. 4ஆவது முறையாக இன்று பதவியேற்கிறார்!

இதனால் சனிக்கிழமைகளில் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் சனிக்கிழமைகளில் காசிமேடு மீன்பிடி பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டவாறு மீன்களை வாங்குவதிலேயே குறியாக இருக்கிறது.

Recommended Video

    கர்நாடகாவில் கொட்டி தீர்த்த மழை.. காவிரி ஆற்றில் 1.50 லட்சம் கன அடி நீர் திறப்பு

    English summary
    Full lockdown in Tamilnadu implemented today. Only Milk and Medicine shops will be opened.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X