சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு

ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஞாயிறு கிழமைகளில் பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதால், முந்தைய நாளான சனி கிழமைகளில் கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து விடுவதால், தனிமனித இடைவெளி அர்த்தமற்றதாகி விடுகிறது எனவே ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை நீட்டித்த தமிழக அரசு, மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணிக்க இ பாஸ் பெற வேண்டும் எனவும், இம்மாதம் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Full Lockdown on Sundays ... Petition in High Court seeking cancellation

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணிக்க பாஸ் பெற தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசின் உத்தரவு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்".. ஜெயக்குமார் அழைப்பு

மேலும், ஞாயிற்று கிழமைகளில் பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதால், முந்தைய நாளான சனி கிழமைகளில் கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து விடுவதால், தனிமனித இடைவெளி அர்த்தமற்றதாகி விடுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A case has been filed in the Chennai High Court seeking the revocation of a relaxed full curfew order on all Sundays in August as the entire curfew was enforced to restrict public movement on Sundays, making crowds in shops earlier in the day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X