சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேமுதிகவின் எதிர்காலம் என்னாகும்?... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்

Google Oneindia Tamil News

சென்னை : தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் வழிநடத்தலே கட்சியின் தோல்விக்கு காரணம் என்று அக்கட்சியின் அடிமட்ட உயிர் தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர்.

தே.மு.தி.க.,விற்கு இறுதி அத்தியாயத்தை, பிரேமலதா எழுதிவிட்டார் என, சமூகவலைதளங்களில், அக்கட்சியினர் பதிவுகளை வெளியிட துவங்கி உள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஓய்வில் உள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள், விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விஜயகாந்திற்கு ஓய்வு கொடுத்து விட்டு, அவருக்கு பதிலாக கூட்டணி முடிவுகளை, பிரேமலதா மற்றும் அவரது சகோதரர் சுதிஷ் எடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்! அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்!

அரசியல் நிலவரம்

அரசியல் நிலவரம்

தேர்தல் நேரத்தில், அரசியல் நிலவரம் குறித்து, கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை ஒருமையில் பேசி கோபப்பட்டார் பிரேமலதா. சாதாரண கேள்விகளையை எதிர்க்ககொள்ள கோப்படும் பிரேமலதா கட்சியை எப்படி வழிநடத்துகிறார் என்று பலர் கேள்விகணைகளை வீசினர்.

போதிய நிதி இல்லை?

போதிய நிதி இல்லை?

ஒரு வழியாக, திமுக கூட்டணிக்கு டாடா காட்டிவிட்டு, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது. செல்வாக்கு இல்லாத தொகுதிகள் என்று தெரிந்தும், ஏதோ ஒரு காரணத்திற்காக, அவற்றை பிரேமலதா ஏற்றார். இந்த தொகுதிகளில், சரியான வேட்பாளர்களையும், அவர் நிறுத்தவில்லை. போதிய நிதியும் கொடுக்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தொண்டர்கள் எந்த பக்கம்

தொண்டர்கள் எந்த பக்கம்

இந்த தேர்தலில், 3 சதவீத ஓட்டுகள் கூட கிடைக்கவில்லை. பிரேமலதாவின் தவறான வழிநடத்தலே, கட்சியின் தோல்விக்கு காரணம் என்று அக்கட்சியின் தொண்டர்கள் ஆதங்களை சமூகவலைதளங்களில கொட்டி வருகின்றனர். கிராமபுறங்களில் உள்ள தொண்டர்கள் நாம் தமிழர், மநீம கட்சிகளின் பக்கம் சாய்வதாக கூறப்படுகிறது. இதனால், தேமுதிக இனி எழுச்சி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாஸ் காட்டியவர் விஜயகாந்த்

மாஸ் காட்டியவர் விஜயகாந்த்

கருணாநிதி, ஜெயலலிதா இருந்த போதே கட்சி ஆரம்பித்து, தனித்து நின்று மாஸ் காட்டியவர் விஜயகாந்த், பின் நாளில், கூட்டணி என்று போய், தேமுதிக தடம் மாறியது. தற்போது, விஜயகாந்த் தீவிர அரசியலில் இல்லாததால், தொண்டர்கள் மேகக் கூட்டங்கள் போல் கலைந்து வருகின்றனர். தேர்தலில் கடந்த இரண்டு முறை தோல்வியுற்று வாக்கு சதவீதம் குறைந்ததால், முரசு சின்னம் முடக்கப்படுகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

English summary
DMDK Treasurer Premalatha Vijayakanth wrote the final chapter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X