சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புரட்டி எடுத்த கஜா புயல்.. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. 28 பேர் பலி!

கஜா புயலுக்கு தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 8 பேர் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    7 மாவட்டங்களில் பாதிப்பு | சிலர் பலி | ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது- வீடியோ

    சென்னை: கஜா புயலுக்கு தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 28 பேர் பலியாகி உள்ளனர்.

    தமிழகத்தை கஜா புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது.

    கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களில் காற்று வீசி வருகிறது.

    புயல் கரையை கடந்திருக்கலாம்.. இனிதான் உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யப்போகிறது.. மக்களே உஷார்! புயல் கரையை கடந்திருக்கலாம்.. இனிதான் உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யப்போகிறது.. மக்களே உஷார்!

    4 பேர் பலி

    4 பேர் பலி

    கஜா புயலால் பட்டுக்கோட்டை சிவக்கொல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர். பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 பேர் பலியாகி உள்ளனர்.

    மிக மோசம்

    மிக மோசம்

    தஞ்சை அதிராமப்பட்டினத்தில் வீடு இடிந்து பெண் குழந்தை பலியாகியது. கடலூரில் சுவர் இடிந்து பெண் ஒருவர் பலியானார். இவரின் கணவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்துள்ளார்.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    திருவண்ணாலையில் சிறுமி ஒருவர் சுவர் இடிந்து பலியானார்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி ப்ரியாமணி பலியானார்., மேலும் 4 பேர் படுகாயத்துடன் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிவகங்கையில் கன மழைக்கு சுவர் இடிந்து விழுந்து முத்து முருகன் (65) என்பவர் பலியானார்.

    அடுத்ததடுத்த பலி

    அடுத்ததடுத்த பலி

    மேலும் சிவகங்கையில் மரம் முறிந்து அரசு ஊழியர் முத்து முருகன் பலியாகி உள்ளார்.சிவகங்கையில் மரம் விழுந்து எலிசபெத் ராணி என்ற பெண் திருவாரூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியாகி உள்ளனர். பண்ருட்டி அருகே மரம் விழுந்து ரங்கநாதன் என்பவர் பலியாகி உள்ளார்.

    எண்ணிக்கை உயர்வு

    எண்ணிக்கை உயர்வு

    புதுக்கோட்டையில் வெவ்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இதில் 4 பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் சிறுமியாவார். தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் பலியாகி உள்ளார். அதேபோல் கொடைக்கானலில் ஒருவர் பலியாகி உள்ளார். கஜா புயல் மோசமாக தாக்கி இருப்பதால், மீட்பு பணிகள் கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கையும் உயர்ந்து இருக்கிறது.

    English summary
    Gaja Storm: 8 people died in TN due to the deadliest attack of the cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X