சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    வண்ணாரப்பேட்டை போராட்டம்: நேரில் வந்த காந்தியின் பேரன்!

    சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    Gandhis grandson Thushar Gandhi met Washermenpet protestors

    இந்த நிலையில் நடந்து வரும் பட்ஜெட்ட கூட்டத்தொடரில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் கடந்த 14ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர்.

    தனுஷ்கோடி அருகே.. 3.5 கிலோ தங்கத்துடன் வந்த இலங்கை படகு.. ஹெலிகாப்டரில் மடக்கிய இந்திய கடற்படைதனுஷ்கோடி அருகே.. 3.5 கிலோ தங்கத்துடன் வந்த இலங்கை படகு.. ஹெலிகாப்டரில் மடக்கிய இந்திய கடற்படை

    அன்றைய தினம் இரவு காவல் துறை தடியடி நடத்தியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த தடியடியை கண்டித்து பெண்கள், குழந்தைகள் என இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில் ஷாகீன்பாக் போராட்டத்தை போன்று அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    English summary
    Mahatma Gandhi's grandson Thushar Gandhi met Chennai Old Washermenpet protestors yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X