சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மக்களுக்கு "பெரும் அதிர்ச்சி" கொடுத்த காந்திய மக்கள் இயக்கம்! தமிழருவி மணியன் அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக காந்திய மக்கள் இயக்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

"இழிந்த சாக்கடையாக மாறிவிட்ட அரசியலமைப்பை சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான வாக்காளர்களிடம் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது" என்று, தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவார் என்று தொடர்ந்து அடித்து பேசிவந்தவர் தமிழருவி மணியன். அது மட்டுமல்ல.. ரஜினி தொடங்குவதாக இருந்த கட்சிக்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டவர் தமிழருவி மணியன்.

பிப்.27 இல் புதிய கட்சியை தொடங்குகிறார் அர்ஜுனமூர்த்தி வரும் தேர்தலிலும் போட்டி ரஜினி ஆதரவு தருவாரா?பிப்.27 இல் புதிய கட்சியை தொடங்குகிறார் அர்ஜுனமூர்த்தி வரும் தேர்தலிலும் போட்டி ரஜினி ஆதரவு தருவாரா?

ரஜினி கட்சி

ரஜினி கட்சி

இந்த நிலையில்தான், ரஜினி பல்டியடித்ததால், அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார் தமிழருவி. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவர் இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் என்ன கூறியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.

தமிழருவி மணியன் அறிக்கை

தமிழருவி மணியன் அறிக்கை

ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை முற்றாக விடுவிக்க வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் ஒற்றை நோக்கமாகும். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற இரண்டு இலட்சியப் பதாகைகளைச் சுமந்தபடி காந்திய மக்கள் இயக்கம் தன் பயணத்தைத் தொடர்கிறது.

 வாக்காளர்களிடம் எண்ணம் இல்லை

வாக்காளர்களிடம் எண்ணம் இல்லை

உண்மை , நேர்மை, ஒழுக்கம், சமூக நலன் சார்ந்த சிந்தனை தன்னல மறுப்பு ஆகியவையே மேலான அரசியல்வாதிகளின் பண்பு நலன்கள் ஆகும். ஆனால் நம்முடைய அரசியல்வாதிகளிடம் இவற்றை காண்பதற்கில்லை இழிந்த சாக்கடையாக மாறிவிட்ட அரசியலமைப்பை சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான வாக்காளர்களிடம் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.

அதிசயம் அரங்கேறாது

அதிசயம் அரங்கேறாது

இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலின் மூலம் எந்த அதிசயமும் அரங்கேறப் போவதில்லை. ஆட்சி நாற்காலியில் அமரும் மனிதர்கள் ஒருவேளை மாறக்கூடும். ஆனால் நெறி சார்ந்த நல்லரசியல் வாய்ப்பதற்கு வழியில்லை. எப்படியாவது ஒரு சந்தர்ப்பவாத அணியில் இடம் பெற்று இரண்டு மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தித் தன் இருப்பை வெளிப்படுத்தும் அருவருப்பான அரசியலில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை. களத்தில் நிற்கும் எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது. இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

English summary
Gandiya Makkal Iyakkam will opt out from Tamil nadu assembly election 2021, says Tamilaruvi Manian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X