சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி.. யார் இவர்?

Google Oneindia Tamil News

Recommended Video

    மதிமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிடும் கணேசமூர்த்தி- வீடியோ

    சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டதன்படி அக்கட்சி சார்பில் கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    Ganesamoorthy is going to contest in Erode LS

    இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்த விவரங்களை திமுக நேற்றைய தினம் அறிவித்தது. இதையடுத்து மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல்.. வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி.. தலைமை தேர்தல் அதிகாரி கண்டிப்பு வேட்பு மனு தாக்கல்.. வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி.. தலைமை தேர்தல் அதிகாரி கண்டிப்பு

    அக்கட்சி சார்பில் கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் குமாரவலசு, சென்னிமலை ஒன்றியம், பெருந்துறை தாலுக்கா, ஈரோடு மாவட்டமாகும். 71 வயதாகும் இவரது தந்தை அவினாசி கவுண்டர், தாய் சாராதாம்பாள்.

    இவரது மனைவி பாலாமணி காலமாகிவிட்டார். மகள், மகன் ஆகியோர் உள்ளனர். இவரது தொழில் விவசாயமாகும். சென்னை தியாகராஜர் கல்லூரியில் பி.ஏ.படித்துள்ளார். சட்டமும் படித்துள்ளார்.

    1978-ஆம் ஆண்டு திமுக மாநில மாணவரணி இணை அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 1989-ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு மொடக்குறிச்சி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். பதவியில் இருந்த 2 ஆண்டு காலத்தில் 2 கால்நடை மருத்துவமனை மற்றும் 3 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வேளாண் கிடங்குகளை தொடங்கினார்.

    1998-ஆம் ஆண்டு மதிமுக சார்பில் பழனி எம்பியாக முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது போல் 2009-ஆம் ஆண்டு ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் மீண்டும் 2014-இல் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வி அடைந்தார்.

    கோவை- திருப்பதி, ஈரோடு- கோவை மின்சார ரயில் கோரிக்கையை வலியுறுத்தி அந்த வழித்தடங்கள் இயங்கக் காரணமாக இருந்தார். பிரச்சினை என யார் அழைத்தாலும் களத்தில் முதல் ஆளாக நிற்பவர் கணேசமூர்த்தி என கூறப்படுகிறது.

    English summary
    Ganesa moorthy from MDMK is going to compete in Erode Lok sabha elections 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X