• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனைவி கண் முன்னே.. பட்டப்பகலில் வெட்டி சாய்க்கப்பட்ட ரவுடி ஆட்டோ ராஜா..வெலவெலத்த சென்னை

Google Oneindia Tamil News

சென்னை: ஆபரேசன் கஞ்சா என காவல்துறை நடவடிக்கை எடுத்து பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தாலும் பட்டி தொட்டி எங்கும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. சென்னையில் கஞ்சா விற்பனை போட்டியில் பிரபல ரவுடியை பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்துள்ளது ஒரு கும்பல். தலைமறைவாக இருந்த கும்பலை கொத்தாக அள்ளி கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

Recommended Video

  Kerala Police | தன்னை வெட்ட வந்த நபரை மடக்கி பிடித்த Police *India

  வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடியின் பெயர் ரவுடி ராஜா என்ற ஆட்டோ ராஜா என்பதாகும். இவர் திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். 49 வயதான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா விற்பனை தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  அவ்வப்போது ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்த இவர், விக்டோரியா மருத்துவமனை சாலை-பாரதி சாலை சந்திப்பில் இவரது மனைவி நடத்தும் தள்ளு வண்டி சாப்பாடு கடையில் நின்று கொண்டிருந்த போது, மாஸ்க் அணிந்து வந்த மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மனைவியின் கண்முன்னே நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  16 வயசு தான்.. கஞ்சா போதை..! நடுரோட்டில் ரகளை செய்த ’டவுசர் பாண்டி’..! திடுக்கிட்ட திருப்பத்தூர்! 16 வயசு தான்.. கஞ்சா போதை..! நடுரோட்டில் ரகளை செய்த ’டவுசர் பாண்டி’..! திடுக்கிட்ட திருப்பத்தூர்!

   போலீஸ் தேடுதல் வேட்டை

  போலீஸ் தேடுதல் வேட்டை

  பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜாம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ராஜாவை கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில், குற்றவாளிகள் சிலரை போலீசார் அடையாளம் கண்டனர். அவர்களின் மொபைல் நம்பரை ஆய்வு செய்தபோது, அவர்கள் அனைவரும் அச்சரம்பாக்கம் பகுதியில் ஒரே இடத்தில் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

  13 பேர் சுற்றி வளைப்பு

  13 பேர் சுற்றி வளைப்பு

  அச்சரப்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த திருவல்லிக்கேணி மாடங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்த சூர்யா,25 அவரது தம்பி தேவா 23, ஜாம் பஜார் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த தனுஷ்,21, மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் 27 திருவல்லிக்கேணி மாடங்குப்பம் கெனால் தெருவை சேர்ந்த அருண் என்கிற கருப்பாண்டி,25 ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற சின்னா 22 , திருவல்லிக்கேணி விக்டோரியா ஹாஸ்டல் சாலைப் பகுதியைச் சேர்ந்த பிரேம்,23 சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த வினோத், 22, வேளச்சேரி பவானி நகரை சேர்ந்த அருண்,23, ஜாம்பஜார் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்,20, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த வைத்தீஸ்வரன்,21 மற்றும் இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனைப் போட்டியில் கொலை நடந்தது தெரியவந்தது.

  கஞ்சா விற்பனை போட்டி

  கஞ்சா விற்பனை போட்டி

  ஜாம் பஜார் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வரும் பிரபல ரவுடிகளான வினோத் (எ) மாட்டாங்குப்பம் வினோத், இவரது சகோதரர் ரவுடி பாலாஜி ஆகியோரது தாய் மாமன் தான் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ராஜா. வினோத், பாலாஜிக்கு கஞ்சா விற்பனையில் உறுதுணையாக இருந்தவர் ஆட்ரோ ராஜா. அவரது ஆட்டோவில் வைத்துதான் கஞ்சாவை டெலிவரி செய்வாராம். திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த சிட்டி சேகர் என்பவரின் மகன்களான ரவுடி சூர்யா, மற்றும் ரவுடி தேவா ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் இரண்டு கும்பலுக்கும் போட்டி ஏற்படவே வினோத், பாலாஜி மற்றும் அவர்களின் தாய்மாமன் ஆகியோரை கொல்வதற்கு ஸ்கெட்ச் போட்டு காத்திருந்தனர்.

   வெட்டி சாய்த்த கும்பல்

  வெட்டி சாய்த்த கும்பல்

  ரவுடி ஆட்டோ ராஜாவின் மனைவியுடன் கள்ள உறவில் இருந்த நபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ரவுடிகளான வினோத் மற்றும் பாலாஜி சிறை சென்றனர். இதனால் ஆட்டோ ராஜா மட்டும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். ரவுடி ஆட்டோ ராஜா மட்டும் தனியாக இருப்பதை அறிந்த ரவுடி சகோதரர்களான சூர்யா, தேவா ஆகியோர் இதுதான் சமயம் என ஆட்டோ ராஜாவை கொலை செய்ய திட்டுமிட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதியம் விக்டோரியா ஹாஸ்டல் சாலை, பாரதி சாலை சந்திப்பில் தனது மனைவி நடத்தி வரும் சாப்பாடு கடையில் ஆட்டோ ராஜா இருந்துள்ளார். அப்போது அங்கு 6 இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்து வந்த சூர்யா, அவரது சகோதரர் தேவா மற்றும் அவர்களது நண்பர்கள் 13 பேர் ரவுடி ஆட்டோ ராஜாவை வெட்டி சாய்த்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

  5 கத்திகள்

  5 கத்திகள்

  போலீசாரின் தொடர் விசாரணையில், இதே கும்பல் அரும்பாக்கத்தில் கஞ்சா வாங்க வந்த அஜீத்குமார், ஸ்ரீரஞ்சன் ஆகியோரை கத்தியால் கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் அங்கிருந்து ஜாம் பஜார் வந்து ரவுடி ஆட்டோ ராஜாவை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. கத்தியால் வெட்டுவதற்கு முன்பு ரவுடி சூர்யா, அஜித்குமாரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஐந்து கத்திகளின் புகைப்படங்களை அனுப்பி இதில் எந்த கத்தியினால் சாக ஆசைப்படுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்குள்ளும் பிரச்னை பெரிதாகியுள்ளது. இதனால் சூர்யா மற்றும் அவரது நண்பர்களும் இருதரப்பும் சமாதானமாகி கொள்ளலாம் எனக்கூறி அஜித்குமார்,ஸ்ரீ ரஞ்சன் ஆகியோரை அரும்பாக்கம் பகுதிக்கு வரவைத்துள்ளனர். 5 கத்திகளால் கொடூரமாக தாக்கியது சூர்யா கும்பல். ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித்குமார் மற்றும் ஸ்ரீ ரஞ்சன் ஆகியோரை அமைந்தகரை போலீசார் மீட்டு கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்தனர். கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   சிறையில் அடைப்பு

  சிறையில் அடைப்பு

  அதே நாளில்தான் சூர்யா, தேவா மற்றும் அவர்களது நண்பர்கள் நேராக ஜாம் பஜார் சென்று ஆட்டோ ராஜாவை கொலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 5 கத்திகள், ஒரு புல்லட் உட்பட 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 11 நபர்களை சிறையிலும், 2 சிறார்களை அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர். கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டியில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  English summary
  சென்னையில் கஞ்சா விற்பனை போட்டியில் பிரபல ரவுடியை பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்துள்ளது ஒரு கும்பல். தலைமறைவாக இருந்த கும்பலை கொத்தாக அள்ளி கைது செய்துள்ளனர் காவல்துறையினர். A gang hacked a famous rowdy in broad daylight at a ganja sale in Chennai. The police rounded up and arrested the gang who were in hiding.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X