சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆந்திரா கஞ்சா சென்னையில் அமோக விற்பனை - தலையனைக்குள் வைத்து நூதன கடத்தல்

சென்னையில் தலையனைக்குள் வைத்து நூதன முறையில் கஞ்சா கடத்திய இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தலைநகரான சென்னையில் போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது காவல்துறையினருக்கு புகார்கள் வருகின்றன. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்மு குடிசைத்தொழில் போல செய்து வருகின்றனர். மாணவர்கள், ஐடி ஊழியர்களும் போதை பொருட்களுக்கு அடிமையாகின்றனர். தலையனைக்குள் வைத்து நூதன முறையில் கஞ்சா விற்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புளியந்தோப்பு, ஓட்டேரி, பேசின்பிரிட்ஜ் பகுதியில் கஞ்சா, மாவா போன்ற போதைப்பொருட்களை குடிசைத் தொழில்களாக செய்வதாகவும் புளியந்தோப்பு துணை ஆணையர் சாய்சரண் தேஜஸ்விக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

Ganja worth Rs 6 lakh seized 2arrested

கஞ்சா வியாபாரிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கஞ்சா வியாபாரிகள் குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரத்தில் ஒரு பெண் உட்பட 2 பேர் கஞ்சா விற்பது தெரிந்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 3 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் 1500 ரூபாய் பிடிபட்டது.

ஜோதி கொடுத்த தகவலின் பேரில் காசி மேட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் மீஞ்சூரை சேர்ந்த பாலமுருகன், மற்றும் காசிமேட்டை சேர்ந்த இளங்கோ ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் பாலமுருகன் கொடுத்த தகவலின்பேரில் மீஞ்சூர் சென்ற தனிப்படை போலீசார் நந்தியம்பாக்கத்தில் உள்ள முக்கிய குற்றவாளிகளை மடக்கினர் 2 பேர் தப்பி ஓடிய நிலையில் கோவையை சேர்ந்த ரமேஷ் என்பவரை பிடித்து அவரது வீட்டை சோதனை செய்தனர்.சோதனையில் அங்கு குவியல் குவியலாக தலையனைகள் இருந்தன.

தலையனையில் இருந்து வந்த கஞ்சா வாசனை வருவதை அறிந்த போலீசார் அதை கிழித்து பார்த்ததில் நூதன முறையில் அதில் கஞ்சா பதுக்கபட்டு இருப்பது தெரிந்தது 30க்கும் மேற்பட்ட தலையனையில் கஞ்சா இருப்பது தெரிந்து அதை பறிமுதல் செய்த புளியந்தோப்பு போலீஸார் இதன் மதிப்பு சுமார் 6 லட்சம் இருக்கும் என்று மொத்தம் 51 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்படுவதாகவும் அதை பிரித்து சென்னையில் சப்ளை செய்யப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. ஜோதி மற்றும் கிருஷ்ணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் மற்ற 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

ஒரிரு நாளில் 3 இடங்களுக்கு சென்று கஞ்சா வியாபாரிகளை பிடித்த தனிப்படை போலீசாரை துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் உதவி ஆணையர் விஜய் ஆனந்த் நேரில் சென்று பாராட்டினார்.

சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு மாணவர்களும் ஐடி ஊழியர்களும் அடிமையாவது அதிகரித்து வருகிறது. இளைய தலைமுறையினரை போதையின் பாதைக்கு இழுக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.

English summary
At least 51 kg of ganja worth Rs 6 lakh at Nandiyampakkam in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X