சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி.. காலையில் சிலைகளை வைத்து, மாலையில் கரைக்க அனுமதிக்க வேண்டும்.. இந்து முன்னணி

Google Oneindia Tamil News

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த எச்சரிக்கையோடு கொண்டாடப்படும், காலையில் சிலைகளை வைத்து, மாலையே அதை கரைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    விநாயகரை வணங்கினால் என்னென்ன நன்மை தெரியுமா? | Ganesh Chaturthi

    கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழி பட கூடாது, சிலைகளை கூட்டமாக சென்று கரைக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அதோடு வீடுகளில் மட்டுமே சிலைகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி.. சென்னையில் களைகட்டிய விற்பனை.. மார்க்கெட்களில் குவிந்த மக்கள்.. கொண்டாட்டம்! விநாயகர் சதுர்த்தி.. சென்னையில் களைகட்டிய விற்பனை.. மார்க்கெட்களில் குவிந்த மக்கள்.. கொண்டாட்டம்!

    என்ன அறிக்கை

    என்ன அறிக்கை

    இந்த நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாடுகளுக்கு இந்து முன்னணி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்போடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

    கூட்டம் இல்லை

    கூட்டம் இல்லை

    கூட்டங்கள், ஊர்வலங்கள் இல்லாமல் இதை நடத்த முன்பே முடிவு செய்து இருந்தோம். தொடக்கத்திலேயே நாங்கள் இதை முடிவு செய்துவிட்டோம் . காலையில் சிலைகளை வைத்து, மாலையே அதை கரைக்க அனுமதிக்க வேண்டும். கூட்டம் சேராமல் கொண்டாட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

    அரசு ஒத்துழைப்பு

    அரசு ஒத்துழைப்பு

    அமைதியான முறையில் விழாவை நடத்த திட்டமிட்டு உள்ளோம். தனி தனியாக வீடுகளில், தனியார் இடங்களில் கொண்டாட அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் விழாவை கொண்டாடும் திட்டம் இல்லை. அரசும் அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    பெரிய இயக்கம்

    பெரிய இயக்கம்

    கொரோனா காலத்தில் எங்கள் அமைப்பு மக்களுக்கு வீடு வீடாக சென்று உதவிகளை செய்துள்ளது.பல கோடி பேரை உறுப்பினராக கொண்ட பேரியக்கம் எங்களுடையது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகையை அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

    English summary
    Ganpati Chaturthi: Govt should allow the idol placing with safety measures says Hindu Munnani in their press release.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X