சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி.. சென்னையில் களைகட்டிய விற்பனை.. மார்க்கெட்களில் குவிந்த மக்கள்.. கொண்டாட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பொருட்கள் வாங்க மக்கள் பொது இடங்களில் குவிந்தனர்.

Recommended Video

    புதுவையிலும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை - முதல்வர் நாராயணசாமி

    நாடு முழுக்க இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளுக்கு இடையே அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடக்கிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுக்க விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொருட்கள் வாங்க மக்கள் பொது இடங்களில் குவிந்தனர்.நேற்று மாலையிலும், இன்று காலையிலும் மக்கள் கடை வீதிகளில் குவிந்தனர்.

    விநாயகர் சதுர்த்தி.. பொது இடங்களில் சிலை வைக்க தடை.. தமிழகம் முழுக்க போலீசார் குவிப்பு! விநாயகர் சதுர்த்தி.. பொது இடங்களில் சிலை வைக்க தடை.. தமிழகம் முழுக்க போலீசார் குவிப்பு!

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    சென்னையிலும் பல இடங்களில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொது இடங்களில் குவிந்தனர். சென்னையில் வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, தியாகராயநகர், பெரம்பூர், மயிலாப்பூர், அண்ணா நகர் ஆகிய இடங்களில் இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    மார்க்கெட் நிலை

    மார்க்கெட் நிலை

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் பிரபல மார்க்கெட்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே சமயம் சிறிய சிறிய விநாயகர் சிலை விற்பனையும் களைகட்டியது. அழகான, சிறப்பான அலங்காரத்துடன் பல்வேறு விலைகளில் இன்று விநாயகர் சிலைகளை விற்பனை செய்தனர். இதை வாங்கவும் கூட்டம் கூடியது.

    மற்ற பொருட்கள்

    மற்ற பொருட்கள்

    அதேபோல் விநாயகர் சதுர்த்தி அன்று பயன்படுத்தப்படும் குடைகள் அதிக அளவில் விற்பனை ஆனது. கொழுக்கட்டை மாவு, ரெடிமேட் கொழுக்கட்டை என்று உணவு பொருட்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. அருகம்புல், மாட்டுச்சாணத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கும் நேற்றும் இன்றும் அதிக கிராக்கி நிலவி வருகிறது.

    அமைதியான கொண்டாட்டம்

    அமைதியான கொண்டாட்டம்

    சென்னையில் சில இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கினார்கள். சில இடங்களில் போலீசார் கட்டுப்பாடு காரணமாக, மக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கினார்கள். தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டுக்கு இடையே அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடக்கிறது.

    English summary
    Ganpati Chaturthi: People gathered in Chennai and other market places to buy various things.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X