சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய போறீங்களா.. பிப்ரவரி 1ம் தேதி முதல் சூப்பர் மாற்றம் நடைமுறை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் புக்கிங் செய்த 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் வழங்கும் தட்கல் முறையிலான சிலிண்டர் வழங்கும் திட்டத்தை பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது இந்தியன் ஆயில் நிறுவனம்.

சிலிண்டர் புக்கிங் செய்த உடன் கிடைப்பது பலருக்கும் இன்னும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. நகரங்களுக்கு ஒரு சில நாளிலும், கிராமங்களுக்கு ஒரு வாரம் வரையிலும் கூட ஆகிறது. இது பொதுவாக உள்ள நடைமுறை

ஆனால் சில கிராமங்களில் சிலிண்டர் டெலிவரியாகி வீட்டுக்கு வர 15 நாட்கள் வரை ஆவதாகவும் சொல்லப்படுகிறது. நாட்டில் லட்சக்கணக்கான பேர் இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தில் வாங்கியவர்கள் என்பதால் அவர்களில் இன்னமும் ஒரு சிலிண்டர்களே உள்ளன. இரண்டுசிலிண்டர் வைத்துள்ளவர்கள் என்பது குறைவு.

இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்தியன் ஆயில் நிறுவனம்

ஆனால் தமிழகத்த்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாடு என்பது பெரிய அளவில் உள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை 1.36 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

எப்படி நடைமுறை

எப்படி நடைமுறை

ஐஓசி என்று அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்த 2 அல்லது 3 நாட்களில் கேஸ் ஏஜென்சிகள் மூலம் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்கிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்று அல்லது 2 சிலிண்டர்கள் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் காலியான சிலிண்டர்களை திரும்ப அளித்த பிறகே புதிய சிலிண்டரை பெறமுடியும்.

வீட்டுக்கு அன்றே டெலிவரி

வீட்டுக்கு அன்றே டெலிவரி

இந்தநிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய சிலிண்டர் புக்கிங் செய்தவுடனே அடுத்த சிலிண்டரை டெலிவரி செய்யும் தட்கல் முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது ஐஓசி. இந்த முறையில் வாடிக்கையாளர் புக்கிங் செய்த நாளிலேயே அவர்களின் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி ஆகிவிடும்.

சிலிண்டர் டெலிவரி

சிலிண்டர் டெலிவரி

'தட்கல் எல்பிஜி சேவா' மூலம் வெறும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மற்ற எண்ணெய் நிறுவனங்களும் சிலிண்டர் டெலிவரியை தக்கல் முறையில் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

English summary
The Indian Oil Corporation (IOC) has decided to offer ‘Tatkal’ booking facility to those consumers who have only one gas cylinder. Under this facility, consumers will get the gas cylinder delivery at their doorstep within 30 mins of booking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X