சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆரம்பிச்சாச்சு.. வீட்டு கேஸ் சிலிண்டர்கள் விலை கிடுகிடு உயர்வு.. சென்னையில் ரூ.606.50 ஆக உயர்வு!

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: 3 மாசமாக உயர்த்தப்படாமல் இருந்த மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை நாடு முழுவதும் ரூ.11.50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.. குறிப்பாக, சென்னையில், மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.37 ஆக உயர்ந்துள்ளது.. இதனால் சிலிண்டரின் விலை ரூ.606.50 ஆக உயர்ந்து சென்னைவாசிகளை மேலும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.

வழக்கமாக, மானிய விலையில் வருஷத்துக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது... இந்த 12 சிலிண்டர்களுக்கு மேல் கூடுதலாக சிலிண்டர் வேண்டும் என்றால், அதனை சந்தை விலைக்கு தந்துதான் வாங்கி கொள்ள வேண்டும்.

 gas cylinder: increase in gas cylinder prices across the country

சர்வதேச சந்தையிலோ, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை மாற்றம் செய்யப்படுகிறது.. இந்த விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி மாற்றி அமைத்தும் வருகின்றன. அதன்படியே தற்போதும் நாடு முழுவதும் ரூ.11.50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.. சென்னையில், கடந்த மே மாசம் ரூ.569.50-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த சிலிண்டர் விலையானது, தற்போது ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது.. அதாவது விலை ரூ.37 அதிகம் ஆகும்.

டெல்லியிலும் சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 593 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் 31 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 616 ரூபாயாக உள்ளது... மும்பையிலும் 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 590 ரூபாய் 50 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. இதில் தற்போது விலை எற்றம் செய்யப்பட்டதில் சென்னைதான் அதிகம். கொரோனா தொற்று உயர்வு காரணமாக ஏற்கனவே நொந்து போயுள்ள சென்னைவாசிகளுக்கு இந்த கேஸ் சிலிண்டர் விலை சற்று அதிர்ச்சியையே தந்துள்ளது.

மிரட்டும் வெட்டுக் கிளிகள்.. வளைத்துப் பிடித்து கோழிக்கு தீவனமாக்கும் விவசாயிகள்.. பலே பாகிஸ்தான்! மிரட்டும் வெட்டுக் கிளிகள்.. வளைத்துப் பிடித்து கோழிக்கு தீவனமாக்கும் விவசாயிகள்.. பலே பாகிஸ்தான்!

இந்த மாசமும் சிலிண்டர் மானியத்தை நேரடியாக மத்திய அரசே வழங்கியுள்ளது என்றாலும், விலை சிலிண்டர் விலை மட்டும் அதிகரித்துள்ளது... எனினும், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை... கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அதே விலைதான் தற்போதும் இதில் நீடித்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டதால், எந்த போக்குவரத்து சேவையும் கடந்த 3 மாதமாக செயல்படவில்லை.. அதனால் பெட்ரோலிய பொருட்களின் தேவை குறையவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும் படுவீழ்ச்சி அடைந்தது.. எனவேதான், கடந்த 3 மாதமாகவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு, இல்லத்தரசிகளின் வயிற்றிலும் பால் வார்க்கப்பட்டது.. தற்போது, 3 மாசமாக உயர்த்தப்படாமல் இருந்த கேஸ் சிலிண்டர் விலை இன்று திடீரென உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்து வருகிறது.

English summary
gas cylinder: increase in gas cylinder prices across the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X