சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு எதிரொலி: தினமும் 4 முறை சுத்தம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கேஸ் சிலிண்டர்கள் நிரப்புவதற்கு கொண்டு வரப்பட்டவுடன் 4 முறை சுத்தம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை கொரோனா பரவல் அதிகளவில் இருக்கிறது. இதை கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து நிலைகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர்கள் 4 முறை சுத்தம் செய்யப்பட்டு அதன் பின்னர் லாரியில் ஏற்றப்படுகிறது.

Gas cylinders are being cleaned by disinfectants 4 times a day, says IOC.

அப்போதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுதான் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதே போல் விநியோகஸ்தர்களிடம் இருந்து டெலிவரி செய்வதற்கு கொண்டு செல்லப்படும் போது கிருமிநாசினிகள் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 55 லட்சம் நுகர்வோர்கள் இருக்கிறார்கள். தினந்தோறும் 80 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்! இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்!

கேஸ் சிலிண்டர்களில் கேஸ் நிரப்புவதற்கு கொண்டு வரப்பட்டதும் 4 முறை சுத்தம் செய்யப்படுகிறது. டெலிவரி செய்யும் நபர்கள் முகக் கவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் நேராக வீடுகளுக்குள் செல்வதால் அதன் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என்றார் அவர்.

English summary
Domestic Gas cylinders are being cleaned by disinfectants 4 times a day, says IOC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X