சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வங்க கடலில் வருகிறது "கதி புயல்".. தமிழகத்தை தாக்குமா?

வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறினால் தமிழகத்தை தாக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறினால் தமிழகத்தை தாக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    New Cyclone : 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

    இந்தியாவை அடுத்தடுத்து இப்போதுதான் இரண்டு புயல்கள் தாக்கியது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆம்பன் புயல் தாக்கியது. 165 கிமீ வேகத்தில் தாக்கிய இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது.

    இதற்கு அடுத்து நிசார்கா புயல் மஹாராஷ்டிராவை தாக்கியது. 100 கிமீ வேகத்தில் மும்பை அருகே இந்த புயல் கரையை கடந்தது.

    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும்.. சென்னையின் நிலை என்ன? வானிலை மையம் கணிப்பு!தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும்.. சென்னையின் நிலை என்ன? வானிலை மையம் கணிப்பு!

    அடுத்த புயல் வரும்

    அடுத்த புயல் வரும்

    நிசார்கா மற்றும் ஆம்பன் புயலை தொடர்ந்து புதிய புயல் இந்தியாவை தாக்க இருக்கிறது. வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த தாழ்வு நிலை நாளை தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் இந்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை பெற்று புயலாக மாறும்

    பெயர் என்ன ?

    பெயர் என்ன ?

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறினால் அதற்கு கதி என்று பெயர் வைக்கப்படும். இந்த பெயர் இந்தியாவால் வைக்கப்பட்டது. இதன் அர்த்தம் வேகம் என்பதாகும். இந்த புயல் எந்த பக்கம் நோக்கி செல்லும் என்று கேள்வி எழுந்துள்ளது. கதி புயல் வங்காள விரிகுடா அருகே உருவாகி வருகிறது. மேற்கு வங்கத்திற்கு கீழ் கதி புயல் உருவாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது மியான்மர் அருகே இது உள்ளது.

    தமிழகத்தை தாக்காது

    தமிழகத்தை தாக்காது

    இந்த புயல் கண்டிப்பாக தமிழகத்தை தாக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் இருந்து 1900 கிமீ தூரத்தில்தான் தாழ்வு நிலையே உருவாகி உள்ளது. அது தெற்கு நோக்கி வராது. மாறாக இந்த தாழ்வு நிலை வட மேற்கு திசையில் நகரும். இன்னும் இதன் பாதை முழுமையாக கணிக்கப்படவில்லை. ஆனால் கண்டிப்பாக தென்னிந்தியாவில் எங்கும் இந்த புயல் தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    எங்கே செல்லும்

    இந்த புயல் வட மேற்கு நோக்கி நகர்ந்தால் உத்தர பிரதேசம் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஒடிசா வழியாக அப்படியே நாக்பூர், இந்தூர் வரை இந்த புயல் செல்ல வாய்ப்புள்ளது. அல்லது ஒடிசா அருகிலேயே இந்த புயல் வலிமை இழந்து கரையை கடக்கும் . இதனால் ஒடிசாவிற்கு இன்னொரு புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள். அங்கு இப்போதுதான் ஆம்பன் புயல் தாக்கியது.

    மேற்கு வங்கம் நோக்கி செல்லும்

    மேற்கு வங்கம் நோக்கி செல்லும்

    அதேபோல் இந்த ஆம்பன் புயல் கடந்த மாதம் மேற்கு வங்கத்தில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கதி புயல் மேற்கு வங்கம் நோக்கி செல்லுமா என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் கதி பெரிய அளவில் மேற்கு வங்கம் நோக்கி செல்ல வாய்ப்பு இல்லை. இந்த புயலின் வேகம் எவ்வளவு இருக்கும் என்று இன்னும் உறுதியாக கூறப்படவில்லை .

    English summary
    Gati Storm: Cyclone may go towards Uttar Pradesh or may land Odisha coastal area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X