• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்ன மிஸ்டர் திருமா.. டிரஸ்ஸை கழட்டிட்டு ஆடுகிறோமா?..உங்களுக்கு நேரம் சரியில்லை.. கொந்தளித்த காயத்ரி

|

சென்னை: "காலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு நேரம் சரியில்லை.. கெட்ட நேரம் ஆரம்பமாயிடுச்சு"என்று காயத்ரி ரகுராம் மறுபடியும் சர்ச்சை பேச்சை கொளுத்தி போட்டுள்ளார்.

சும்மாவே விசிகவினரை சீண்டி, எதையாவது ட்விட் போட்டு பரபரப்பை கிளப்பி கொண்டிருப்பவர் பாஜகவின் அபிமானி காயத்ரி ரகுராம்... இப்போது அவருக்கு கட்சியில் புதிய பொறுப்பு தரப்பட்டு விடவும், அவரது பேச்சு எல்லைமீறி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

Gayathri Raghuram blasts Thirumavalavan in strong words

ஏற்கனவே ஒருமுறை திருமாவை ஜோக்கர் என்று சொன்னார்.. பிறகு கறுப்பர் கூட்டம் குறித்த விவகாரத்தில் வரிந்து கட்டிக் கொண்டு வந்து திருமாவுக்கு எதிராக வீடியோ பதிவிட்டார்.. அதில், "என்ன மிஸ்டர் திருமாவளவன், நீங்க வேல் குத்திருக்கீங்களா? இல்ல பால் காவடி எடுத்துறீங்களா?. நீங்க திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க. கைநீட்டு காசு வாங்குறீங்க. அதுக்காக நீங்க சொல்றது எல்லாம் சரியாகிடுமா? இதோட எதுவும் பேசாதீங்க நாங்க சும்மா இருக்கமாட்டோம்" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.. காயத்ரியின் இந்த வீடியோவுக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்போது மறுபடியும் திருமாவளவனின் சர்ச்சை பேச்சினை பாஜக விவகாரமாக்கி கொண்டு வருகிறது. மனுதர்மம் குறித்த திருமாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய காயத்ரி ரகுராம், "என்ன மிஸ்டர் திருமாவளவன், என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நடிகைகள் டிரஸ்ஸை கழற்றி ஆடுவார்கள் என்று சொல்கிறீர்களே.. நாங்கள் டிரஸ்களை அவிழ்த்து போட்டு ஆடுபவர்கள் இல்லை.. டிரஸ்களை கழற்றுபவர்கள் இல்லை, காலில் ஒன்னு இருக்கு.. ஞாபகம் வெச்சுக்குங்க.

"மதம்" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

நாங்கள் காலில் உள்ளதை கழற்றுபவர்கள்.. உங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பமாயிடுச்சு.. ஜெயிலுக்கு போக போறீங்க.. கடந்த வருஷமே உங்களை நேருக்கு நேர் விவாதத்துக்கு கூப்பிட்டேன், ஆனால் பயந்து கொண்டு அமெரிக்காவில் போய் ஒளிஞ்சிக்கிட்டீங்க.. இப்பவும் சிதம்பரத்துக்கு ஒடி போய் உட்காந்துட்டீங்க" என்று பேசினார்.

காயத்ரியின் இந்த பேச்சுக்கு விடுதலை சிறுத்தையினர் கொந்தளித்து வருகின்றனர்.. "என்ன மிஸ்டர் திருமாவளவன் என்று காயத்ரி பேசும்போதே அவரை கண்டிக்க ஆள் இல்லை.. திருமாவளவன் வயசு என்ன, காயத்ரியின் வயசு என்ன? அவர் அரசியல் அனுபவம் என்ன? இவர் அனுபவம் என்ன? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதையாவது வாய்க்கு வந்தபடி பேசுவதா?" என்று கொந்தளித்து கேட்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Gayathri Raghuram blasts Thirumavalavan in strong words
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X