சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணாமலைக்கு எதிராகவா நானா அப்படி சொல்லவே இல்லையே! ஏன் என் பெயரை கெடுக்கறீங்க?.. கடுகடுத்த காயத்ரி

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணாமலைக்கு எதிராக அரசியல் செய்வேன் என நான் கூறியதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அது போல் நான் எந்த இடத்திலும் கூறவில்லை என பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இது அடுத்த மாதம் வரை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.

அது போல் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எல் முருகன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு காயத்ரியை அழைக்கவில்லை.

காயத்ரி பாஜக பத்தி தப்பா பேசுறாங்க.. அண்ணாமலை இல்லைனா நானில்ல! நான் போலி மருத்துவரா? அலிஷா விளக்கம் காயத்ரி பாஜக பத்தி தப்பா பேசுறாங்க.. அண்ணாமலை இல்லைனா நானில்ல! நான் போலி மருத்துவரா? அலிஷா விளக்கம்

 தமிழ் தொடர்பான நிகழ்வு

தமிழ் தொடர்பான நிகழ்வு

அதாவது வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக உள்ளார் காயத்ரி. அப்படியிருக்கும் போது ஒரு தமிழ் தொடர்பான நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காதது குறித்து ட்விட்டரில் காயத்ரி வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் டெய்சி சரணை திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியான நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

கட்சிக்கு களங்கம்

கட்சிக்கு களங்கம்

உடனே காயத்ரி ரகுராம் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் என்பதால் அவரை கட்சியிலிருந்தும் அவர் வகித்த பதவியிலிருந்தும் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும் அவருடன் கட்சி ரீதியில் யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் அவர் கொடுத்த பேட்டிகளில் தன்னிடம் விசாரணையே செய்யாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் நான் தலைவர் அண்ணாமலையின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என காயத்ரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு எதிராக நான் அரசியல் செய்வேன் என காயத்ரி சொன்னதாக ஒரு தினசரி செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது.

காயத்ரி ரகுராம் பேட்டி

காயத்ரி ரகுராம் பேட்டி

அந்த செய்தியை சுட்டிக் காட்டிய காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: "அண்ணாமலைக்கு எதிராக நான் அரசியல் செய்வேன்" என்ற தலைப்பை நான் கூறவே இல்லை. நான் இதை கண்டிக்கிறேன், என் பெயரை கெடுப்பதற்காக யாராவது இது போல் பேட்டிகளை கொடுக்கிறார்களா? பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. இதுகுறித்து வழக்கு தொடருவேன்.

நெட்டிசன்கள் காயத்ரிக்கு கேள்வி

நெட்டிசன்கள் காயத்ரிக்கு கேள்வி

இது போல் மோசமான வேலையை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பேன். நான் எந்த செய்தித்தாள்களுக்கும் தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுக்கவில்லை. ஒரு வேளை அவர்களாகவே நான் பேட்டி அளித்தது போல் ஏதோ ஒரு கருத்தை போட்டனரா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் காயத்ரிக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

 வீட்டுப் பிரச்சினை

வீட்டுப் பிரச்சினை

பொதுவாக வீட்டு பிரச்சினையாக இருந்தாலும் சரி கட்சி பிரச்சினையாக இருந்தாலும் சரி அவற்றை வெளியே கொண்டு வரக் கூடாது. எதுவாக இருந்தாலும் 4 சுவற்றிற்குள் முடித்துவிட வேண்டும். காசி தமிழ் சங்கமம் தொடர்பான விஷயத்தை நீங்கள் அண்ணாமலை, வானதி உள்ளிட்டோரிடம் பேசி தீர்த்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படி பொது வெளியில் போட்டதால்தான் அனைத்தும் உங்களுக்கு எதிராக போய் முடிந்துள்ளது என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். "நீங்கள் யாருக்கும் பேட்டி கொடுக்காதீர்கள், காளிகாம்பாள் கோயிலுக்கு போய் 48 நாட்கள் விரதம் இருங்க. நல்லதே நடக்கும் என்றும் சில நெட்டிசன்கள் காயத்ரிக்கு அட்வைஸ் செய்துள்ளார்கள்.

English summary
BJP Gayathri Raghuram says that some are spoiling me by giving interviews on behalf on me.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X