• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அரசியலிலிருந்து பிரேக் எடுக்கிறேன்.. வேடிக்கை பார்க்கப் போகிறேன்.. காயத்ரி ரகுராம் தடாலடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: "நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை" என்று புலம்பி தள்ளியதுடன், அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்!

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். இது பிக்பாஸ் நிகழ்ச்சி முதல், அவரது ஒவ்வொரு ட்வீட் வரை நாடறிந்த விஷயம்தான்!

பின்னர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால் திடீரென இவருக்கும் தமிழிசைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது காயத்ரி, பாஜகவில் உறுப்பினரே இல்லை என்று ஒரேபோடாக போட்டார் தமிழிசை. இதற்கு காயத்ரி, எனக்கு மோடிதான் தலைவர் என்று பதிலடி தந்தார். இவர்கள் இருவரும் மாறிமாறி விமர்சித்து கொண்டது சர்ச்சையானது,

சத்தம் போடாமல் கப்சிப்னு இருக்கும் கூட்டணி கட்சிகள்.. கமுக்கமா இருக்கும் திமுக, அதிமுக.. என்ன காரணம் சத்தம் போடாமல் கப்சிப்னு இருக்கும் கூட்டணி கட்சிகள்.. கமுக்கமா இருக்கும் திமுக, அதிமுக.. என்ன காரணம்

மோடிக்கு பாராட்டு

மோடிக்கு பாராட்டு

இதன்பிறகு எம்பி தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். காங்கிரஸை தாக்கி சரமாரி ட்வீட் போட்டார். அதோடுவிடவில்லை.. அந்த ட்வீட்டுகளில் மோடியை மறக்காமல் பாராட்டியபடியே இருந்தார்.

முதிர்ச்சி தலைவர்கள்

இந்நிலையில் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக தடாலடி ட்வீட் போட்டுள்ளார். அதில், ‘வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்து விட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது.

வருத்தம்

நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன். முடிவில் நாம் நகைச்சுவை பொருளாகிவிடுகிறோம். இது எனது தனிப்பட்ட கருத்து.

போலி போராளிகள்

சினிமாவைவிட, அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்க பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன். அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை வி‌ஷயங்களே.

தனிப்பட்ட முடிவு

நான் இப்போதைக்கு வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் பல வி‌ஷயங்களை கற்றுக்கொள்ள சிறிது இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. தேவைப்படும்போது நான் செய்கிறேன். இப்போதைக்கு நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

English summary
Dance Master and Actress Gayathri Raguramm withdraws form BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X