சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்க சொல்றதெல்லாம் சரி.. திமுகவில் முதல்வராக உங்களுக்கு இடஒதுக்கீடு தருவார்களா.. காயத்ரி வம்பு!

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என கனிமொழி கூறியதை அடுத்து திமுகவில் முதல்வராக இருக்க உங்களுக்கு இடஒதுக்கீடு தருவார்களா என கேட்டு பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் வம்பிழுத்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கூட்டம் கூடாமல் இருக்குமாறு முதல்வர ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நீட் தேர்வு: தமிழக முதல்வர் ஸ்டாலினை பின்பற்றுங்கள் மம்தா.. மேற்கு வங்கத்தில் எழுந்த அதிரடி கோஷம் நீட் தேர்வு: தமிழக முதல்வர் ஸ்டாலினை பின்பற்றுங்கள் மம்தா.. மேற்கு வங்கத்தில் எழுந்த அதிரடி கோஷம்

அந்த வகையில் திமுக, கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரவர் வீடு, அலுவலகம் முன்பு இந்த போராட்டத்தை நடத்தினர். சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழியும் அவரது வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு

அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் மத்திய அரசுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் அமையும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதேபோன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வரவேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு என்ற கருத்தை தெரிவிததிருந்தார்.

கனிமொழியின் கருத்து

கனிமொழியின் கருத்து

இந்த நிலையில் கனிமொழியின் இந்த கருத்தை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் நிர்வாகியாக இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் அண்மைக்காலமாக திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகிறார். அது போல் இந்த கட்சிகளுக்கு யாரேனும் வக்காலத்து வாங்கினாலும் அவர்களையும் சேர்த்து விமர்சித்து வருகிறார்.

டிவிட்டரில் பதிலடி

டிவிட்டரில் பதிலடி

கனிமொழியின் கருத்தை மேற்கோள்காட்டி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் திமுகவில் முதல்வராக இருக்க உங்களுக்கு இட ஒதுக்கீடு தருவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இவரை கண்டித்து பலர் டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்கள். அது போல் சிலர் காயத்ரியின் கருத்தை வரவேற்றும் உள்ளார்கள்.

பெண்களின் இடஒதுக்கீடு

பெண்களின் இடஒதுக்கீடு

அதில் ஒரு வலைஞர் பெண்ணாக இருந்து கொண்டு பெண்களின் இட ஒதுக்கீட்டு எதிராகவே பேசுகிறீர்கள். ஆம் நீங்களெல்லாம் கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக தேசியகொடியை தூக்கி கொண்டு போராடியவர்கள் தானே.

அறியாமை

அறியாமை

உங்களுடைய பதிவுகளின் மூலம் அறியாமை, அசட்டுத்தனம் வெளிப்படுகிறது...முதல்வர் பதவி என்பது இட ஒதுக்கீடு மூலம் கிடைப்பது அல்ல. மக்கள் ஆதரவு, கட்சி தொண்டர்கள் ஆதரவு, அனுபவம், தியாகம், வெற்றி வாய்ப்பு, நம்பிக்கை மற்றும் எல்லோராலும் ஏற்று கொள்ளப்படும் தன்மை என பல காரணிகளின் கலவை என்கிறார் இந்த வலைஞர்.

முதல்வர் ஆக்கிடலாம்

முதல்வர் ஆக்கிடலாம்

நீங்க பிரதமர் ஆகும் போது அவங்கள முதல்வர் ஆக்கிடலாம்.. சரியா..? கேள்வி கேட்கணும்னு கேட்டா என்ன தான் பண்ணுறது..?

காயத்ரி கருத்துக்கு வரவேற்பு

காயத்ரி கருத்துக்கு வரவேற்பு

குறைந்தபட்சம் திமுக தலைவராக உங்களுக்கு இட ஒதுக்கீடு தருவார்களா,ஏன் நீங்கள் கருணாநிதி வாரிசு இல்லையா,உங்களுக்கு அந்த தகுதி இல்லையா என இந்த வலைஞர் காயத்ரியின் கருத்தை வரவேற்றுள்ளார்.

English summary
BJP activist Gayathri Raguramm asks DMK MP Kanimozhi about reservation for women in both Parliament and Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X