சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதம் குறித்த விஜய் சேதுபதி பேச்சு.. காயத்ரி ராகுராம் கண்டிக்கிறாரா... பாராட்டுகிறாரா..!

Google Oneindia Tamil News

சென்னை: மதம் குறித்த நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சுக்கு பாஜக ஆதரவாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிமை சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், சாமிக்காக சண்டை போட்டுக்கிறவங்க.. சாமி பல கோடி வருஷமா இங்க இருக்கு.. அதை சாதாரண மனிதனால் காப்பாத்த முடியாது... கடவுள் மேல இருக்கான்... மனிதன் தான் இங்கே வாழ்கிறான். மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரவேண்டும். மேல இருந்து எதுவும் வந்து காப்பாத்தாது. மதத்தின் பெயரை சொல்லி கடவுளை பிரிக்கிறார்கள்.

கடவுளை காப்பாற்றும் கும்பல்

கடவுளை காப்பாற்றும் கும்பல்

மதம் அவசியம் இல்லாதது... நம்புங்க ப்ளீஸ். மதமோ சாதியோ மனுஷன காப்பாத்தாது. கடவுளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க. ஒருத்தன் ஏதாவது மதத்த பத்தி பேசுனா அதுக்கு தன்னோட மதத்துல இருக்கிறதுல இருந்து பேசாம மனிதத்தை மனிதநேயத்தையும் பேசுங்க. மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும். கடவுள் எல்லாம் நம்மை காப்பாத்தாது. மனுஷங்கள நேசிக்கிறேன்..கடவுளை தள்ளி வச்சி தான் பாக்குறேன்" என்றார்.

கடவுள் தான் பெரியவர்

கடவுள் தான் பெரியவர்

விஜய் சேதுபதியின் இந்த கருத்துக்கு பதிலடியாக பாஜக ஆதரவாளரும் நடிகையுமான காயத்ரி ராகுராம் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்னொரு மனிதரை நம்புவதற்கு வாழ்த்துகள் நண்பா. எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கிலான நம்பிக்கையானவங்க இருக்காங்க.நாங்களெல்லாம் ஊமை என்று நீங்கள் நினைத்தால் மன்னிச்சிடுங்க எளிதில் பொய் சொல்லக்கூடிய வெறுக்கக் கூடிய மற்றொரு மனிதனை நீங்கள் நம்புவதற்கு சாரி. வாழ்க்கை கடவுளால் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமனிதன் மூலம் தான் இன்னொரு மனிதனுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பொய். மனிதனின் வெற்றி கடவுள் கையில் தான் உள்ளது. எனவே நான் மனிதனை விட கடவுளைத் தான் நம்புவேன் என்று கூறினார்.

கடவுளை நம்புவது

கடவுளை நம்புவது

இதையடுத்து விஜய் சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்து காயத்ரி ரகுராம் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள டுவிட் பதிவில். "நான் விஜய் சேதுபதியின் பேச்சைக் கண்டிக்கவில்லை. அவர் சுதந்திரமாக பேசுவதுதான் ஜனநாயகம். நான் அவருடைய கருத்தில் ஒத்துப் போகவில்லை. அது என்னுடைய சுதந்திரம். எல்லோரும் கடவுளை நம்புவதை நிறுத்த வேண்டுமென்று, விஜய் சேதுபதி சொல்லவில்லை. கடவுள் நம்பிக்கையாளர்களை நம்புவதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் பகுத்தறிவாளர்கள் விஜய் சேதுபதியின் பேச்சை விரும்புவார்கள்.

மத சண்டைகள்

மத சண்டைகள்

இந்துக்கள் இந்துக்களுடன் சண்டையிட வேண்டாம் .. முஸ்லீம்கள் முஸ்லிம்களுடன் சண்டையிட வேண்டாம். கடவுளை நம்ப வேண்டாம் என்று கேட்பது சரியாக இல்லை. வேறொரு மனிதனை நம்பும்படி கேட்கிறது யார்? நாத்திகம் மனிதநேயம் அல்ல, அவர்கள் மோசடி செய்பவர்கள். பெரும் குற்றங்களைச் செய்கிறார்கள். அனைத்து மத சண்டைகளும் அரசியல் நாத்திகக் குழுக்களால் மட்டுமே நம்மிடம் தூண்டிவிடுகின்றன. இது அசிங்கமான உண்மை. அது மிகப்பெரிய குற்றம். நாத்திகக் குழுக்களை நம்ப வேண்டாம் என்று நீங்கள் எங்களிடம் கேட்டேன். அவர்கள் மத உணர்வுகளை தங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துகிறார்கள், நம்மைத் தூண்டுகிறார்கள். ஆபத்தான மக்கள் (வைரஸ் அவர்கள்).

மனித நேயம்

மனித நேயம்

விஜய் சேதுபதி கடவுளை குறிப்பிடாமல் அல்லது எந்த மதத்தையும் அவமதிக்காமல் மனிதகுலத்தைப் பற்றி மட்டுமே பேசியதை பாராட்டுகிறேன்.. நான் சொன்னது போல் இன்று மனிதநேயம் நீண்ட காலமாகிவிட்டது. சிறிய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் செல்லப்பிராணிகளிடம் தான் சிறந்த மனிதநேயம் உள்ளது. நான் எங்கள் சொந்த உழைப்பின் மீதும் கடவுள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்" இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

English summary
gayathri raguram reply to vijay sethupathi over religious comments at master movie audio release gayathri raguram reply to vijay sethupathi over religious comments at master movie audio release
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X